பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதியுள்ள முன்னுரையுமாகும்.

2.பாரதியாருடைய படைப்புகளின் சிறப்புகள், அவைகளின் தற்கால மற்றும் நீண்டகாலப் பொருத்தங்கள் நாட்டு வளர்ச்சிக்கு மிகவும் தேவையான கருத்துக்கள் நிறைந்தனவாகும்.

3. பாரதியாரின் படைப்புகள் மிகப் பெரும்பாலும் தமிழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவைகள் இதர இந்திய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட வேண்டியதும் அவசியமானதாகும்.அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

4. இந்த ஆய்வு நூல் பாரதியாரின் படைப்புகளின் சிறப்புகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தியும், அவை நாடு முழுவதிலும் பரப்ப வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திக் கூறுவதுமாகும்.


2. இந்த நூலின் முக்கிய அம்சங்கள்:

2-1'தேசிய கீதங்கள்' என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள பாரதியாரின் பாடல்கள் மிகவும் பிரச்சித்தி பெற்றவை. இருபதாம் நூற்றாண்டின் இருபது, முப்பதாம் ஆண்டுகளில் விடுதலைப் போராட்டம் தீவிரப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் பாரதியாரின் தேசியப் பாடல் கருத்தும் துடிப்பும், வேகமும் ஆவேசமும் நிறைந்த பாடல்களாக விளங்கின. அப்போது பாரதியாரின் பாடல்கள் விடுதலைப் போராட்ட வீரர்களின் போர்க்குரலாக விளங்கியது. இளைஞர்கள், பாலர்களின் வாயசைவுகளாக விளங்கின.

2-2 ‘வந்தே மாதரன்' என்னும் தேச பக்திச்சொற்களைத் தனது பாடல்கள் மூலம் பாரதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். தமிழகம் முழுவதிலும் ‘வந்தே மாதரம்’ என்னும் வீரச் சொற்கள் எதிரெக்க பாரதி பாடல்கள் காரணமாக விளங்கின.

எடுத்த எடுப்பிலேயே ‘வந்தே மாதரம்’ என்போம்- எங்கள் மாநிலத் தாயை வணங்குவதும் என்போம் என்று தொடங்குகிறார்.

‘'வந்தே மாதரம்’' என்னும் தலைப்பிலான பாடலில்,

‘'ஜாதி மதங்களைப் பாரோம் என்றும், ‘'ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி’ என்று குறிப்பிட்டு, ஜாதிப் பிரச்சனை என்பது எங்களுக்குள் உள்ள உள்நாட்டுப்பிரச்சனை எங்களுக்கு அந்த பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வோம். அதில் அன்னியர்கள் வந்து எங்களுக்கு நீதி புகட்டச் தேவையில்லை என்று அந்நிய ஆட்சியைச் சாடுகிறார்.