பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சுட்டும் விழிச்சுடர்தான்-கண்ணம்மா!

சூரிய சந்திரரோ என்றும்,

‘நெரித்த திரைக்கடலில்

நின்முகம் கண்டேன்

நீலவி அம்பின்மை நின் முகங்கண்டேன்

திரித்த துரையின்மை நின்முகம் கண்டேன்.

சின்னக் குமிழிகளில் நின் முகங் கண்டேன்

  • கண்ணம்மா - என் காதலி என்னும் பாடல்களில்

‘பாயு மொளி நீயெனக்கு

பார்க்கும் விழி நானுனக்கு

தோயும் மது நீ யெனக்குத்

தும்பியடி நானுனக்கு

வீணையடி நீ எனக்கு

மேவு விரல் நானுனக்கு

வானமழை நீ எனக்கு

வண்ணமயில் நானுனக்கு

நல்லவுயிர் நீ எனக்கு

நாடியடி நானுனக்கு

வீரமடி நீ எனக்கு

வெற்றியடி நானுக்கு”

என்றெல்லாம் அற்புதமாக பாரதி பாடுகிறார்.

இத்தகைய பக்தி சுவை, இன்னப் சுவை நிறைந்த பாடல்கள் உலகில் எங்குமில்லை.

  • கண்ணன் என் ஆண்டான் என்னும் தலைப்பில் பாரதி ஒரு அற்புதமான பாடலைப் பாடுகிறார்.

‘இன்பமும் நோயும் மிடிமையுள் தீர்த்துக்

30