பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுகமருளல் வேண்டும்

அன்புடன் நின்புகழ் பாடிக் குறித்து நின்

ஆணைவழி நடிப்பேன்” என்றும்

ஒரு அருமையான அர்த்தமுள்ள பாடலைப் பாடுகிறர்.

  • கண்ணம்மா எனது குல தெய்வம் என்னும் தலைப்பில்,

‘நின்னைச் சரணடைந்தேன்ை-கண்ணம்மா!

நினைச் சரணடைந்தேன்.

நல்லது தீயது நாமறியோம்

அன்னை நல்லது நாட்டுக

தீமையை ஒட்டுக’

என்று அதி அற்புதமாக சரணாகதி தத்துவம் நிறைந்த பாடலை பாடி முடிக்கிறார்.

பஞ்சாலி சபதம்

பாஞ்சாலி சபதம் ஒரு அற்புதமான காவியம், மகாபாரதப் பெருங்கதையில் ஒரு முக்கியமான, திருப்புமுவையான நிகழ்ச்சி. மய்யமான நிகழ்ச்சி சூதாட்டம். அதையொட்டி நடைபெற்ற கொடுமையான நிகழ்ச்சி பாஞ்சாலியை பணயமாக வைத்து துலிலுரிதால் நிகழ்ச்சி. இந்தக் கொடுமையான நிகழ்ச்சி, மகாபாரதக் கதையில் வரும். ஒரு மய்யமான நிகழ்ச்சி யாகும். சகோதாரச் சண்டையில் நடுவான நிகழ்ச்சி.

பெருமைக்கி பாஞ்சாலி நாட்டின் திருமகள். வீரமிக்க ஐவரின் மனைவிய பாசாலி, மன்னர்சபையில் மானபங்கப்படுத்தப்படுகிறாள். உலகைக் காக்கும் காத்தல் கடவுள்கண்ணபிரான் பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்றுகிறான். பாஞ்சாலி சபதம் செய்கிறாள். அச்சபதம் போர்ககளத்தில் நிறைவேற்றப்படுகிற, பாஞ்சாலி சபத மேற்குமு இந்த நிகழ்ச்சியை மையமாகக் கருவாக வைத்து இந்த மகாகவி யின் எழுதப்பட்டிருக்கிறது.

பாரதி தனது காவியத்திற்கு எழுதியுள்ள முகவுரையில் எளிய மதங்கள், எளிய நடை, எளிதில், அறிந்து கொள்ளக்கூடிய சந்தம் பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவிய மொன்று தறி காலத்திலே செய்து தருவேன் நமது தாய் மொழிக்குப் புரிய உயிர் தருவோனோகிறான். ஒரிரண்டு வருஷத்து நூற்பழக்க முள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு

3 |