பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவும் சலிப்பு மெனத்தான் பல் கணமுடையாள்

ஜடா வெருமை ஏறும் கரு நிலத்துக் காலனார்

இடாது பணி செய்ய இலக்கு மகாராணி

மங்களம் செல்வம் வளர் வாழ்நாள்

நற்கீர்த்தி

‘துங்கமுறு கல்வியெனச் சூழும் பல கனத்தாள்

ஆக்கந்தானாவா, அழிவு நிலையாவாள்

போக்கு வர வெய்தும் புதுமை யெலாந்

தானாவாள்

மாறி மாறிப் பின்னும் மாறி மாறிப் பின்னும்

மாறி மாறிப் போம் வழக்கமே தானாவாள்.

ஆதிபாராசக்தி, அவள் நெஞ்சம் வன்மையுறச்

சோதிக்கதிர் விடுக்கும் சூரியனாம் தெய்வத்தின்

முகத்தே இருள்படர

என்று மகாகவி பாடுகிறார்.

இவ்வாறு மகாகவி கூறுகிறார். இத்தகையதொரு அற்புதமான காட்சியை

நமக்கு மகாகவி பாரதி காட்டுகிறார். இதற்கு ஈடு இணையே இல்லை.

இந்த வார்த்தைகளில் மகாகவி பாரதி உலகின் உச்சிக்கு உயர்ந்து

விட்டான். பாஞ்சாலி சபதத்தை மட்டுமல்ல, சூதாட்டப் பணயத்தை மட்டுமல்ல, தமிழ்க் கவிதையை உச்சத்திற்குக் கொண்டு சென்று விட்டார்.

துச்சாதனன், பாஞ்சாலியின் குழல் பிடித்து இழுத்துச்செல்லும் காட்சியை, பாரதி ஆவேசத்துடன் குறிப்பிடுகிறார்.

ஒரு வீதியில் ஒரு ஊரில், ஒரு நாட்டில், ஒரு அக்கிரம அநியாயம் நடந்தால் அதை மற்றவர் தட்டிக் கேட்க வேண்டாமா?

துச்சாதனன், பக்கத்திலே வந்து பாஞ்சாலி கூந்தலினைக்

‘கையினாற்பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்

ஐயகோ வென்றே யலறியுணர்வற்றும்

36