பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் தந்தேவியவள் பாதியுயிர் கொண்டு வர

நீண்ட கருங்குழலை நீசன் கரம் பற்றி

முன்னிருத்துச் சென்றான வழி நெடுக

மொய்த்தவராய்’

‘என்ன கொடுமையிது வென்று பார்த்திருந்தார். ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ? வீரமிலா நாய்க, விலங்காம் இளவரசன்

தன்தன மிதித்துத் தாரதலத்தில்

போக்கியே

பொன்னையவள் அந்தப் புரத்தினிலே

சேர்க்காமல்

‘நெட்டை மரங்களென நின்று புலம்பினார்,

பெட்டைப் புலம்பல் பிறர்க்குத்துணையாமோ?

பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்

சீரழியக் கூந்தல் சிதையைக் கவர்ந்து போய்க்

கேடுற்ற மன்னர் அறங்கெட்டசபை தனிலே

கூடுதலும் அங்கே போய்க் ‘கோ’ வென்று

அலறினாள்’

என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.

மகாகவி, அநியாயத்தைக் கண்டு சீறியெழும் குணமுடையவர் அதை அவருடைய கவிதைச் சொற்களில் காண்கிறோம்.

  • பாஞ்சாலியின் ஆவேசக் குரலைக்கேட்டு மன்னர் சபையில் ஒரு சலசலப்பு ஏற்படுகிறது. சிலர் பேசுகிறார்கள்.

இந்தக் காட்சியை மகாகவி மிக அற்புதமாகக் காட்டுகிறார்.

சபையில் இவ்வாறு திரெளபதி நீதி கேட்டுப் பேசிய காட்சி, பாரத நாட்டின் சீரிய வரலாற்றில் ஒரு முக்கிய, ஒரு மிக முக்கிய நிகழ்ச்சியாக மகாகவி பாரதி நமக்குக் காட்டுகிறார்.

  • மன்னர் சபையில்

திரெளபதி நீதி கேட்டு அழுகிறாள்.

உலக மக்கள் சபையில் பாரத தேவி நீதி கேட்டு அழுவதைப் போல்

37