பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாதிப் பாகுபாடுகளையும் ஜாதி வேற்றுமைகளையும் நீக்கி பாரதத்தின் அனைத்து மக்களும் ஒன்றுபடவேண்டும் என்று.

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே. நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே’

என்றும்,

‘முப்பது கோடியும் வாழ்வோம். விழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’

என்று ஒற்றுமையின் அவசியத்தை ஆணியடித்துக் கூறுகிறார்.

2-3 நாட்டு வணக்கம்’ என்னும் தலைப்பில்,

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே’ என்று தொடங்கி

‘இன்னுயிர் தந்தெமை ஈன்று

வளர்த்து அரு

ஈந்தது இந்நாடே’

‘மங்கையராயவர் இல்லறம் நன்கு

வளர்த்தது இந்நாடே’

இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

என்னும் அற்புதமான கருத்துச் செறிவான உள்ளத்தை உருக்கும் பாடலைப் பாடுகிறார்.

2-4 ‘பாரத தேசம் என்னும் பாரத நாட்டின் பெருமைகளை குறிப்பிட்டு பாரதி பாடுகிறார். அதில் பாரத நாட்டின் தேசியம் குறித்து அவருடைய புதிய கருத்தோட்டம் வெளிப்படுவதைக் காண்கிறோம்.

இந்திய தேசியம் என்பது வெறும் அந்நிய ஆங்கிலேயர்ஆட்சியை அகற்றி விட்டு நமது ஆட்சியை நிறுவது மட்டுமல்ல, பெருமைமிக்க பாரத தேசம் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்று தொடங்கி,