பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரெளபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை

பாரதி கதையைத் தொடர்கிறார்,

‘துச்சாதனன் எழுந்தே அன்னை

துகிலினை மன்றிடையுரிதலுற்றான்

‘அச்சோ, தேவர்களே! என்று

அலறி அவ்வதுரனும் தசை சாய்ந்தான்!

பிச்சேறிய வனைப் போல் அந்தப்

பேயனும் துகிலினை உரிகையிலே

உட்சோதியில் கலந்தாள் அன்னை

உலகத்தை மறந்தாள் ஒருமையற்றாள்.

இவ்வாறு துகிலு:றிதல் கொடுமை தொடங்குகிறது.

பாஞ்சாலி (அன்னை) உலகை மறந்தாள். ஒருமையுற்றாள் இங்கு கண்ணன் பாஞ்சாலியின் மானம் காத்த காட்சியை பாரதி நமக்கு காட்டுகிறார். நமது உடல் புல்லரிக்கிறது.

  • ‘ஹரி ஹரி ஹரி என்றாள்'- கண்ணா

அபயம் அபயமுனக்கபயம் என்றாள்

கரியினுக் கருள் புரிந்தே அன்று

கயத்திடை முதலையினை

உயிர் மடித்தாய்

கரிய நன்னறிமுடையாய்-அன்று

காளிங்கன் தலைமிசை

நடம்புரிந்தாய்

பெரிய தோர்பொருளாவாய்- ‘கண்ணா!

பேசரும் பழமறைப் பொருளாவாய்

  • சக்கர மேந்தி நின்றாய்! - கண்ணா

சார்ங்க மென்றொரு வில்லைக்

48