பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஞானத்திலே பரமோனத்திலே

தீபத்திலே படை வீரத்திலே

நன்மையிலே உடல் வன்மையிலே

ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே

யாகத்திலே தவ வேகத்திலே’ என்று சிறந்த நாடு

இன்னும்

‘வெள்ளிப் பனி மலையின் மீது லாவுவோம்; அடி

மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்; என்றும்

வங்கத்தில் ஒடி வரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’ என்றும்

இன்னும்

‘'காவியம் செய்வோம் நல்ல

காடு வளர்ப்போம்

கலை வளர்ப்போம் கொல்லர்

உலை வளர்ப்போம்

ஒவியம் செய்வோம் நல்ல

ஊசிகள் செய்வோம்

உலகத் தொழில் அனைத்தும்

உவந்து செய்வோம்’

என்று பாரத நாட்டின் பாரத மக்களின் முழுவடிவத்தைத் தனது தேசிய சிந்தனையில் விவரித்துப் பாடுகிறார்.

இவ்வாறு

‘பாருக்குள்ளே நாடு,

பாரத தேசமென்று பெயர் சொல்லுவர்

மன்னும் இமயமலையெங்கள் நாடே

எனனும தொட ங்கும பாடல