பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கம்பத்தில் உள்ளானோ அடா

காட்டுன்றன் கடவுளைத் துணிடத்தே

வம்புரை செய்மூடா- என்று

மகன் மிசையுறுமி அத்துாணுடைத்தான்

செம்பவிர் குழலுடையான்- அந்தத்

தீய வல்லிரணியனுடல் பிறந்தாய்

நம்பி நின்னடி தொழுதேன்- என்னை

நானழியாதிங்குக் காத்தருள் வாய்.

  • வாக்கினுக்கீசனையும்- நின்றன

வாக்கினி வசைத்திடும்

வலிமையினால்

ஆக்கினை காத்துடையாய்- என்றன்

அன்புடை எந்தை என்னருட்கடலே!

நோக்கினிற் கதிருடையாய்- இங்கு

துற்றுவர் கொடுமையைத் தவிர்த்

தருள்வாய்

-தேக்கு நல்வானமுதே இங்குச்

சிற்றிடை பாய்ச்சிலில் வெண்னெ

யுண்டாய்

  • வையகம் காத்திடுவாய்- கண்ணா

மணிவண்ணா, என்றன் மனச்

சுடரே

ஐயநின் பதமலலே சரண்

ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி என்றாள்

50