பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்யர் தம் துயரினைப் போல்- நல்ல

புண்ணிய வாளர்தம் புகழினைப் போல்

தையலர் கருணையைப் போல்- கடல்

சலசலத்தெறிந்திடும் அலைகளைப் போல்,

  • பெண்னொளி வாழ்த்திடுவார். அந்தப்

பெருமக்கள் செல்வத்திற்

பெருகுதல் போல்

கண்ணபிரான் அருளால் - தம்பி

கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய்

வண்ணப் பொற் சேலைகளாம்- அவை வளர்ந்தன. வளர்ந்தன, வளர்ந்தனவே!

எண்ணத்திலடங்காவே- அவை

எத்தனை எத்தனை நிறத்தனவோ!

  • பொன்னிழை பட்டிழையும் - பல

புதுப்புது புதுப்புது புதுமைகளாய்ச்

சென்னியிற்கை குவித்தாள். அவள்

செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே

முன்னிய ஹரி நாமம்- தன்னில்

மூளுநற் பயன் உலகறிந்திடவே

துன்னிய துகிற்கூட்டம்- கண்டு

தொழும்பத்துச்சாதனன் வீழ்ந்து விட்டான்

  • தேவர்கள் பூச்சொரிந்தார். ஒம் ஜெய ஜெய பாரத சக்தி என்றே

ஆவலோடு எழுந்து நின்று-முன்னே

5 |