பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைகளின் பண்ேெறாம்.

இவ்வாறு பகா வியின் சிறப்புமிக்க ல்களினால் அவரை தமிழ் மக்கள் மகாகவி என்று அறிந்தார்கள். உலகமும் அறியத் தொடங்கியது. ஆனால் மகாகவி பாரதியார் வெறும் மகாகவி மட்டுமல்ல சிறந்த

பத்திரிகையாளர், பத்திரிகையாசிரியர், சிந்தனையாளர், தீர்க்கதரிசி சிறந்த எழுத்தாளர், கட்டுரையாளர், செய்தியாசிரியர், கதாசிரியர், மிகச் சிறந்த எழுத்தாளர் தமிழ் மொழியின் இன்றைய உரைநடைக்கு மகாகவி பாரதியே மூலகர்த்தா. எளிய நடை, இனிய சொற்கள் பாமரரும் சுலமாகப் புரிந்து கொள்ளும் தமிழ் எழுத்து நடை

மகாகவி பாரதி, சுதேசமித்திரன் தினசரி பத்திரிகை துணையாசிரியராகப் பணியாற்றினார். பாரதி அப்பத்திரிகையின் செய்தியாசிரியராக, தலையங்கம் எழுதுபவராக, செய்தித் தொகுப்பாளராக, மொழி பெயர்ப்பாளராக, செய்தி விமர்சகராக, செய்தியாசிரியராக இன்னும் ஒரு பத்திரிகைக்குத் தேவையான எல்லாப் பணிகளையும் செய்து நிறைவேற்றுபவராக பல்துறைப் பணியாளராக பணியாற்றியுள்ளார்.

சுதேசமித்திரனின் துணையாசிரியராகப் பணியாற்றியது மட்டுமல்ல, இந்தியா போன்ற சில பத்திரிகைகளையும் நடத்தினார். பல பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளும் கதைகளும் எழுதினார்.

மகாகவி பாரதியாருடைய சிறந்த கட்டுரைகள் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளன. அவரைப் பற்றிய பல செய்திகளும் அவருடைய நூறாவது பிறந்தநாளின் போது வெளிவந்தன. --

பாரதியாருடைய எழுத்துக்கள் கட்டுரைகள், கதைகள் அனைத்தும் தொகுத்து வெளியிடப்படுவதற்கும் தொடர்ந்துப ல முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. அவருடைய எழுத்துக்கள் அனைத்தையும் தொகுப்பு நூல்களாக வெளியிடவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் மேலும் அதிகமாக பாரதியைப் பற்றியும், அவருடைய கட்டுரைகள் கருத்துக்கள் பற்றியெல்லாம் நமக்கு அதிகமான விவரங்கள் கிடைக்கும். அவைகளின் தொகுப்புகளும் கிடைக்கும். பாரதி புதையலைத் தோண்டி வெளிக் கொணர்வதற்காக பல தேசபக்தர்களும் பாரதி அன்பர்களும் பல முயற்சிகளும் செய்து வருகிறார்கள். இவ்வரும் பணிகளில் சினி விஸ்வநாதன் போன்ற பாரதி பக்தர்களும், அறிஞர்களும் பல முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய முயற்சிக்கு பராசக்தி அருள் புரிவாளாக வந்தே மாதரம்!

மகாகவி பாரதியாரின் எழுத்துக்களை வெளிக் கொணர்வது மட்டுமல்ல. அவருடை எழுத்துக்களின் படைப்புகளின் கருத்துக்களயுைம் ஆணைகளையும் செயல்படுத்த வேண்டும் பாரத நாட்டின் சிறப்புகள்

53