பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைத்தையும் வெளிக் கொணரவேண்டும். மகாகவி பாரதியின் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் முதலியன பாரத நாட்டின் இதர மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். உலகின் இதர மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும்.

அவருடைய உணர்வுப்பூர்வமான கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும், கருத்துக்களும், உலகமெங்கும் வர வேண்டும்.

பாரதத்தை உலகம் நன்கு அறிய வேண்டுமானால் உலகம் பாரதியை நன்கு படிக்க வேண்டும்.

  • தியானம் என்னும் தலைப்பில் பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்

தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான்.

நமது உள்ளத்திலே நீரத்தன்மை, அமைதி, பலம், தேஜஸ், சக்தி, அருள், பக்தி, சிரத்தை இந்த எண்ணங்களையே நிரப்ப வேண்டும். இவற்றையெல்லாம் நான் எனது உடமையாக்கிக் கொள்வேன். இவற்றிற்கு எதிர்மறையான சிந்தனைகள் எனது அறிவினுள்ளே நுழைய இடம் கொடுக்க மாட்டேன்’ என்று ஒவ்வொருவறும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையில் பாரதி மேலும் கூறுகிறார்.

‘பரிபூரணி விருப்பத்துடன் தியானம் செய்- சோர்வும் அதைரியமும் விளைவிக்கத்தக்க எண்ணங்களுக்கு இடம் கொடாதே.... ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல உனக்குள் இருந்து தெளிந்த அறிவும், தீர்த்தன்மையும், சக்தியும் மேன்மேலும் பொங்கி வரும். உனது இஷ்ட சித்திகளெல்லாம் நிறைவேறும். இது சத்தியம் அனுபவத்திலே பார்’ என்று உறுதிமிக்க சொற்களில் பாரதி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

  • சக்தி தர்மம் என்னும் தலைப்பில்

ஆத்மா உணர்வு, சக்தி செய்கை

உலகம் முழுதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல்,

நடத்துதல் என்ற மூவகையான சக்தி இவ்வுலகத்தை ஆளுகிறது. இதைப் பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்லும்.

பாரதியார், வே மதங்களைப் பற்றி தனது கட்டுரை ஒன்றில் விவரித்துக் கூறுகிறார். அது ஒரு சிறந்த கட்டுரையாகும். ஆதிசங்கரர் இந்த வேத மதங்கள்

54