பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவராத்திரி ஒன்பது நாள் விழா இதை பாரதி சிறப்பாக நினைவுப்படுத்துகிறார்.

ஒன்பது நாளும் தியானம், கல்வி, தவம், இவற்றிலே செலவித்திறமை, இல்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்க வேண்டும். இந்த பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

‘சக்தியால் உலகம் வாழ்கிறத

நாம் வாழ்வை விரும்புகிறோம்

ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம் என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.

  • ஒவ்வொருவருக்கும் மூன்று வித சக்தி வேண்டும். 1) அறிவு, 2) செல்வம், 3) தைரியம். இந்த மூன்றும் நமக்கு இகலோகத்தில் கிடைக்கும் படியாகவும், இதனால் பரலோக இன்பங்களும் சாத்யமாகும் படியாகவும் நாம் தெய்வத்தை வழி படுகிறோம்.

பக்திக்கு மாத்திரமே தெய்வத்தை நம்புவது சிலருடைய வழி. இகலோக இன்பங்கம் வேண்டுமென்று தெய்வத்திடம் கேட்டு வாங்கிக் கொள்வது மற்றொரு வழி.

  • விக்கிரமாத்தியன் வணங்கிய தெய்வம், காளிதாசனுக்குக் கவிதை காட்டிய தெய்வம். பாரிநாட்டு மகாஜனங்களின் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்.

ஸ்ரீமந்நாராயணன் மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை, சிவ பிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி, பிரமதேவன் தலைவியாகிய சரஸ்வதி மூன்று மூர்த்திகள் மூன்று வடிவங்கள் பொருள் ஒன்று. அதன் சக்தி ஒன்று, பொருளும் அதன் சக்தியும் ஒன்றே. இங்ஙனம் ஒன்றாக விளங்கும் சக்தியென்ற தெய்வத்தை ஹிந்துக்கள் உபாசனை செய்வதற்கு விசேr பருவமாக இந்த நவராத்திரியின்காலத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவாக பாரதி:

எல்லா மதங்களும் உண்மைதான். ஒரு மதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதி மனிதர் பிரிந்து விடக்கூடாது. எல்லா மதத்தினரும் பிரிந்து விடக்கூடாது. எல்லா மதத்தினரும் ஒரே தெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். வெளக்க விஷயங்களைப் போலவே மத விஷயங்களிலும் ஒப்பு, உடன் பிறப்பு, விடுதலை மூன்றும் பாராட்டப்பட வேண்டும்.

  • நம்பிக்கை என்னும் தலைப்பிலான ஒரு கட்டுரையில் மகாகவி பாரதி.

‘ஆழ்வார்களுடைய குலம் நானாவிதம். அப்படியிருந்தும் அவர்களைக்

56