பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் வைத்துப் பூஜை செய்யலாமென்று ராமானுஜர் நியமித்தார். மூற்காலத்தில் பிராமணர் இதர ஜாதியினரை இழிவாக வைத்துக் கொடுத்தார் காளன்றும், ஞானத்திற்கு தகாதவரென்று சொல்லி அடிமைப்படுத்தினார்களென்றும் பொய்க்கதைகள் சொல்லி ஹிந்து தர்மத்தை அழிக்க விரும்புகிற கிறிஸ்தவம் பாதிரிகளும் அவ்விடத்து சிஷ்யர்களும், ராமானுஜாசாரியார் பிராமணர் என்பதை அறிய மாட்டார் போலும் சூத்திரராகிய திருக்கச்சி நம்பியை ராமானுஜர் குருவாகக் கொண்டு அவருடைய உச்சிஷ்டத்தை உண்ண திருவுளம் கொண்டார். திருநாராயணபுரத்தில் பறையர் ஒரு சமயம் கோயிலுக்குள் வரலாமென்று ஸ்ரீ ராமனுஜர் நியமித்தருளிய முன்பு இன்றைக்கு நடந்து வருகிறது’ என்று குறிப்பிடுகிறார். so

  • பாரதி தைரியம்’ என்னும் தலைப்பில் ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் அச்சமே மடைமை, அச்சமில்லாமையே அறிவு விபத்துக்கள் வரும் போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை சாஸ்திரம் படத்திருந்தாலும் மூடன்தான். விபத்துக்கள் வரும் போது எவன் உள்ளம் நடுங்காமல் துணிவுடன்அவற்றையெல்லாம் முயற்சி செய்கிறானோ அவன் ஞானி.

‘ஹரி ஓம்’ என்று எழுதத் தெரியாத போதிலும் அவன் ஞானிதான். சிவாஜி மகாராஜா தனது சொந்தப் பிரயத்தனத்தினாலும், துணிவாலும் புத்தி கூர்மையாலும் அவுரங்கசிப்பின் கொடுமையை அழித்து மகாராஷ்டிரம் ஏற்படுத்தித் தர்ம ஸ்தாபனம் செய்தார்.

பாரத வாசதிகளாகிய நாம் இப்போது புனருத்தாரணம் பெறுவதற்காகக் கல்வி வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். நாம் துணிவு வேண்டும் என்கிறோம். துணிவே தாய். அதிலிருந்து தான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன என்று அக்கட்டுரையில் எழுதுகிறார்.

பாரதியார்

  • ‘உயிரின் ஒளி’ என்னும் அருமையானதொரு கட்டுரை எழுதியுள்ளார். அது இந்திய நாட்டின் அண்மைக் காலத்தின் மிகப்பெரிய மகான்களில் ஒருவரான உலகத்தார்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானியாவார். அவனைப் பற்றிய கட்டுரையில், ‘மேற்படி ஜகதீஸ் சந்திரவஸ்-நம்முடைய ஹிந்து மதத்தில் ஆழ்ந்த பக்தியுடையவர் என்பது சொல்லாமலே விளங்கும் ஹிந்துக்களின் மேன்மையைப் பற்றி அவர் வார்த்தை சொல்லும் போது அந்த வார்த்தைகளிலே மிகச்சிறந்ததொரு ஜீவநாதம் உண்டாகிறது. அந்த வார்த்தைகளைப் படிக்கும் போதே படிப்போரின் ஜீவசக்தி மிகுதிப்படுகிறது என்று பாரதி குறிப்பிடுகிறார். மேலும் பாரதி குறிப்பிடுகிறார்.

இப்போது நமது கண்முன்னே இரண்டு விதமான தர்மங்கள்

57