பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத மாதா என்று பாடல்

என்னும் பாடல்கள் பாரத நாட்டின் பெரு வடிவத்தைக் காட்டி, அதன் பாரம்பரியத்தையும் வரலாற்றுச்சிறப்பையும் பண்பாட்டுச் சிறப்பை எடுத்துக்காட்டி புதியதொரு பாரதப் பண்பாட்டு தேசியத்தை எடுத்துக் கூறி நம்மைப் பெருமைப்படுத்துகிறார்.

‘முப்பது கோடி முக முடையாள்- உயிர்

மொய்ம்புற வொன்று டையாள். இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற்

சிந்த ைஒன்றுடையாள்’

என்று பாரத நாட்டின் ஒரு புதிய தேசிய சிந்தனையை பண்பாட்டை ஒற்றுமையை ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறார்.

அதே பாடலில்,

‘நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம் புரிவாள் எங்கள் தாய்- அவர்

அல்லவராயின் அவரை விழுங்கிப்பின்

ஆனந்தக் கூத்திடுவாள்’

என்று ஒரு அற்புதமான கருத்துச் செர்வு மிக்க பாடல் வரிகளைக் கூறுகிறார்.

ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சிப் பாடல் பாடினார். அரங்கனைத்தட்டி எழுப்பினார். பள்ளி கொண்ட பிரனென உலகில் உள்ள அனைவரையும் அழைத்துதுயிலெடுப்ப ‘கதிரவன்குணதிசைசிகரம் வந்தடைந்தான் என்று பாடலைத் தொடர்ந்தார். அந்த வழியில் பாரதியார்,

துங்குகின்ற பாரத நாட்டு மக்களை துயிலெழுப்ப பொழுது புலர்ந்ததுயாம் செய்த தவத்தால்

என்று தொடங்கும் அற்புதமான பாடல்களைப்பாடுகிறார். இந்தப் பாடல் வரிசையில்,

‘விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி

வேண்டியவாறு உனைப்பாடுதும் காணாய்”

என்று குறிப்பிடுவது சிறப்பாகும்.