பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டிதருக்குத் தெரியும். எனினும் நம்மவர் ஒருவர் நேரே போய் அந்தஸ்தானத்தை நிலை நிறுத்துவதற்கு இதுவரை அவகாசப் படாமலிருந்தது. வங்காளத்து மகாகவியாகிய ரவீந்திரநாத் தாகூர் போய் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தார். இந்தத் தொழிலுக்கு அவர் மிகவும் தகுதியுடையவர். அவருடைய கவிதையின் கீழ் பூமண்டலம் முழுவதும் ஏற்கனவே பரவியிருக்கிறது. உலகத்து மகாகவிகளின் தொகையில் அவரைச் சேர்த்தாய் விட்டது.

  • கீதாஞ்சலி முதலாக அவர் இங்கிலிஷ் பாஷையில் வழி மொழி பெயர்த்து வெளியிட்டி இருக்கும் நூல்கள் மிகவும் சிறியன. பார கவியங்களல்ல. பெரிய நாடகங்களல்ல. தனிப் பாடல்கள் சில காண்பித்தார். உலகம் வியப்படைந்தது. நல்வயிரமணிகள் பத்துப் பன்னிரண்டு விற்றால் லக்ஷக்கணக்கான பணம் சேர்நது விடாதோ? தெய்வீகக் கவிதையிலே பத்துப் பக்கம் காட்டினால் உலகத்துப் புலவரெல்லாம் வசப்பட மாட்டாரோ?” என்று பாரதி குறிப்பிடுகிறார்.
  • பாரத பூமி உலகத்தாருக்கு எவ்விதமான ஞானத்தைக் கொடுத்துப் புகழைக் கொள்ளுமென்பதை விளக்குவதற்கு முன்பாக சாஸ்திரி (ஸயின்ஸ்) வார்த்தை ஒரிராண்டு சொல்லி முடித்து விடுகிறேன். செடியின் நாடி மண்டலம் மனிதனுடைய நாடி மண்டலத்தை போலவே உணர்ச்சித் தொழில் செய்கிறதென்பதை உலகத்தில் சாஸ்திரி நிரூபணத்தால் ஸ்தாபனம் செய்வதர் நமது ஜகதீச சந்திரவஸ் உலோகங்களிலும் இவர் பல புதிய சோதனைகள் செய்திருக்கிறார். ஒளி நூலில் மகாவித்வான் தந்தி இல்லாத துர பாஷைக்கருவியை மார்க்கோஜி பண்டிதர் உலகத்துக்கு வழக்கப்படுத்து முன்பே ஜகதீசசந்திரர்.அந்த விஷயத்தைப் பற்றித்துல்லியமான ஆராய்ச்சிகள் செய்து முடித்திருக்கிறார்: “செடிகளுடைய பிராணளில் நாடி உணர்ச்சி எங்ஙனமெல்லாம் தொழில் செய்கிறது என்பதைக் கண்டு பிடித்ததே இவர் மனித சாஸ்திரத்திற்கு இதுவரை செய்திருக்கும் உபகாரங்களில் பெரிது. இப்போது சில வருஷ்களாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பண்டிதக் கூடத்தார் ஜகதீச வஸ்விடம்.மிகுந்த மதிப்புப் பாராட்டி வருகின்றனர். நல்ல புகழச்சி கூறுகின்றனர். நவீன சாஸ்திர ஆராய்ச்சிக்கு மிகவும் நுட்பமான கருவிகள் வேண்டும். ஜகதீச வஸ்-வின் ஆராய்ச்சிக்கருவிகள் கல்கத்தாவில் நமது தேசத்துத் தொழிலாளிகளாலே செய்யப்படுவன. ஐரோப்பிய ராஜதானிகளிலே இத்தனை நேர்த்தியாக அந்தக் கருவிகளைச் செய்யத்தக்க தொழிலாளிகள் இல்லை. ஆகையால் அங்குள்ள பண்டிதர்கள் புதிய வழியில் செடி ஆராய்ச்சிக்கு வேண்டிய கருவிகளையெல்லாம் கல்கத்தாவிலிருந்து வரவழைத்துக் கொள்ளுகிறார்கள்.

‘'சாஸ்திரம் பெரிது, சாஸ்திரம் வலியது. அஷ்டமகா சித்திகளும் சாஸ்திரத்தினால் ஒரு வேளை மனிதனுக்கு வசப்படலாம். பூர்வ காலத்தில்

62