பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு விடுவர். அதே கேள்வியை நீதிபதி மணி அய்யர், கேசவப் பிள்ளை சிதம்பரப் பிள்ளை முதலியவர்களைப் போய்க் கேளுங்கள், ‘அப்படிப் பெரிய அபாயம் ஒன்று உண்டாகாது ஸ்வராஜ்யம் கிடைத்தால் கஷ்டம் குறையும். பஞ்சம் வந்தால் அதைப் பொறுக்கத்திறன் உண்டாகும். அகாலமானம் நீங்கும், அவ்வளவு தான்’ என்று சொல்லுவார்கள்.

அதுபோல் பெண்களுக்கு விடுதலை கொடுத்ததனால் ஜனசமூக குழம்பிப் போய்விடும் என்று சொல்லுவோர் பிறர் தமது கண்முன் சுயேச்சையுடன் வாழ்வதைத் தாம் பார்க்கக் கூடாதென்று அசூயையால் சொல்லுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை’ என்று எழுதுகிறார்.

இத்துடன் பெண் விடுதலை சில திட்டங்களையே பாரதி முன் வைக்கிறார்.

1) பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக்கூடாது.

2) அவர்களுக்கு இஸ் டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.

3) விவாகம் செய்து கொண்ட பிறகு விருப்பமில்லாவிட்டால் அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்கவேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.

4) பிதுரார்ஜியத்தில் பெண் குணந்தைகளுக்கு ஸ்மபாகம் கொடுக்க வேண்டும்.

5) புருஷன் இறந்த பிறகு ஸ்திரி மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.

6) விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம் கைத் தொழில் முதலியவற்றால் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரிகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்.

7) பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும்

o

பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட

நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.

8) பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.

9) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.

10) தமிழ்நாட்டில் ஆண் மக்களுக்கே ராஜரிக சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே அது பெண்களுக்கு வேண்டுமென்று கூறுதல் பயனில்லை.

64