பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் தந்தான்

என்று கம்பன் தனது இராமாவதாக் காவி பத்தில் அகத்தியனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

தமிழுக்குக் தொடக்கத்தில் அகத்தியன் இலக்கணமும் வகுத்தான் என்னும் செய்தியைக் கம்பன் இங்கு குறிப்பிடுகிறார்.

மகாகவி பாரதி மேலும் எழுதுகிறார்.

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல இடங்களிலும் காணப்படும் நாகரிகங்களுக்கெல்லாம் முந்தியதும் பெரும்பான்மையான மூலாதார்ாக நிற்பது ஆரிய நாகரிகம் அதாவது பழைய சம்ஸ்கிருத நூல்களிலே சித்திரிக்கப்பட்டு விளங்குவது- இந்த ஆரிய நாகரிகத்திற்கு சமமான மு1ை. கொண்டது தமிழருடைய நாகரிகம் என்று கருதுவதற்குப் பலவிதமான லாகூவியங்கள் இருக்கின்றன. ‘ஆதியில் பரமசிவனால் படைப்புற்ற மூல பாஷைகள் வடமொழியென்று சொல்லப்படும் சம்ஸ்கிருதமும் தமிழுமேயாகும்’ என்று படைத் தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை வெறுமே புராணக் கற்பனை அன்று ‘தக்க சரித்திர ஆதாரங்களுடையது. தமிழரும் ஆரியருமல்லாத ஜனங்களைக் கடவுள் பேச்சில்லமெலா வைத்திருந்தார்’ என்று கேட்பீர்களாயின் மற்றச் சொற்களும் பல இருக்கத்தான் செய்தன. ஆனால் மனித நாகரிகத்தில் முதல் முதலாக இவ்விரண்டு பாஷைகளிலே தான் உயர்ந்த கவிதையும் இலக்கியங்களும் சாஸ்திரங்களும் ஏற்பட்டன. மற்ற பாஷைகளின் இலக்கிய நெறிகள் இவற்றுக்குப் பின்னே சமைந்தன. பல இடங்களில் இவை இயற்றின் நடையையே முன்மாதிரியாகக் கொண்டன. அதாவது ஆரியரும் தமிழருமே உலகத்தில் முதல் முதலாக உய்ர்ந்த நாகரிக பதவி பெற்ற இவ்விரண்டு வகுப்பினரும் மிகப் பழைய நாட்களிலேயே ஹிந்து மதம் என்ற கயிற்றால் கட்டுண்டு ஒரே கூட்டதாராகிய செய்தி பூ மண்டலத்தின் சரித்திரத்திலேயே மிக விசேஷ மும் நலமும் பொருந்திய செய்திகளின் ஒன்றாக கவனத்திற்குரியது என்று பாரதி குறிப்பிடுகிறார்.

பாரதி மேலும் எழுதுகிறார்,

தமிழ்நாட்டு மாதராகிய என் அன்புக்குரிய, சகோதரிகளே இத்தனை பழைமையும் மேன்மையும் சான்ற இரண்டு பகுதிகளின் மேன்மையும் சான்ற இரண்டு பகுதிகளின் கலப்பாகுந்தன்மையால் பாரத தேசத்திலேயே மற்ற பிற தேசங்களிலுள்ள நாகரிகத்தைக் காட்டிலம் கூட ஒருவாறு சிறப்புடையதாகக் கருதுதற்குரிய ஆர்ய திராவிட நாகரிகம் உங்களுடைய பாதுகாப்பிலிருக்கிறது.

  • இதனை மேன்மேலும் போஷித்து வளர்க்கும் கடமை உங்களைச் சேர்ந்தது. எங்ஙனம் எனில் பொதுப்படையாக நோக்குமிடத்தே மனித

69