பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரிகங்கள் ஆண் மக்களின் உதவி கொண்டு பிறப்பிக்கப்படுகின்றன. அப்பால் பெரும்பாலும் பெண்களாலேயே காக்கப்படுகின்றன.

இடைக்காலத்தில் மகமதிய நாகரிகம் வந்து ஹிந்து தர்மத்தைத் தாக்கியது. ஆனால் ஹிந்து தர்மம் அதிலுள்ள முக்கிய அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு அந்தத் தாக்குதலால் அழி வெய்காமல் முன்னைக்காட் டிலும் அதிக சக்தியுடன் மிஞ்சி நின்றது. -

சமீப காலத்தில் ஐரோப்பிய நாகரிகம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இதுவும் நமது நாட்டு நாகரிகத்துடன் நன்றாய் கலந்து விட்டது. இனி இதன் விளைவுகளை நம் நாட்டாரின் அறிவினின்றும் நடைகளினின்றும் முற்றிலும் பிரித்துக்களைதல் சாத்தியப்படாது. இது நம்முடைய தேச ஞானத்தின் மர்மங்களுக்குள்ளே கலந்து பெரும்பாலும் நமதாய்விட்டது.

எனினும் நம்மவரிலே பல பண்டிதர்கள் பல வருஷங்களாக இந்த ஐரோப்பிய நாகரிகத்தை நாம் முற்றிலும் உதரித்தள்ளி விடுதல் நன்றா? அல்லது அதனை நாம் முழுமையாகவே தழுவிக் கொள்ளலாமா அல்லது இதிலுள் நல்ல அம்சங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு தீயவற்றைக் களைந்து விடலாமா? என்ற விஷங்களைக் குறித்து நீண்ட ஆலோசனைகளும் விசாரணைகளும் ஆராய்ச்சிகளும் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த ஐரோப்பிய நாகரிகமென்பது ஒரு ஸ்துலவஸ்துவன்று- ஸ்தூலவஸ்துவாக இருந்தால் அதை நம் இஷ்டப்படி துண்டு துண்டாக வகுக்கவும் வேண்டிய அம்சங்களை எடுத்துக் கொள்ளவும் பிறவற்றை விலக்கவும் செளகரியப்படும். மனிதர்களின் பயிற்சி இத்தகைய பொளுன்று அஃது ஸ்ஷ்ைமப் பொருள் என்று பாரதியார் எழுதுகிறார். -

‘சகோதரிகளே! நீங்கள் ஐரோப்பிய நாகரிகத்தின் சேர்க்கையைக் குறித்து சிறிதேனும் வருத்தப்பட வேண்டாம். அது நமது தேசத்துப் பயிற்சியை அழிக்கும் வலிமையுடையதன்று. அது நமக்குத் தனை அது நாம் அஞ்சுவதற்குரிய பிசாசன்று-வெவ்வேறு வகைப்பட்ட இரண்டு நாகரிகங்கள் வந்து கூடும் போது அவற்றுள் ஒன்று மிகவும் வலியதாகவும் இருக்குமாயின் வலியது வலிமையற்றதை இருந்த இடம் தெரியாமல் விழுங்கிவிடும். வலிமையற்ற நாகரிகத்திற்குரிய பாவையும் மகமும் முக்கியத்தன்மையற்ற புற ஆசாரங்கள் மாத்திரமேயன்றி விவாக முறை முதலிய முக்கிய ஆசாரங்களும் அழிந்து மறைகின்றன. அந்த நாகரிகத்தைக் காத்து வந்த ஜனங்கள் பலமுடைய நாகரிகஸ்தரின் பாஷை மதம் முதலியவற்றைக்கைக் கொள்கிறார்கள்.

  • பிலிப்பரோ தீவில் அமெரிக்க நாகரிகம் இவ்வகை வெற்றியடைந்திருக்கிறது. ஆனால் நம்முடைய ஹிந்து நாகரிகம் இங்ஙனம் சக்தியற்ற வஸ்துவன்று பிற நாகரிகங்களுடன் கலப்பதனால் இதற்குச் சேதம்

70