பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயனார் ‘முப்பால் (மூன்று பகுதிகளுடையது) என்ற பெயருடைய திருக்குறள் செய்தருளினார். ஆயிரத்து முன்னுற்று முப்பது சிறிய குறட்பாக்களில் நாயனார் அரம், பொருள், இன்பம் என்ற முப்பாவையும் அடக்கிப்பாடுவது மிகவும் அபூர்வமான செய்கை என்று கருதப்பட்டது. இது கண்ட ஒளவைப் பிராட்டி வீட்டுப் பாடலையும் கூட்டி நான்கு வெண்பாவுக்குள் அடக்கிப்பாடினார். இந்த ஆச்சரியமான கவண்பா பின்

வருமாறு:

‘ஈதலறம் தீவினை விட்டீட்டல் டொருள், எஞ்ஞான்றும்

காதலிருவர் சுகத்தொழு மிகி-தாதரவு

பட்டதோ இன்பம், பானை நினைந்திடும் மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு’.

இவ்வெண்பாவின் கருத்து யாதொழில் ஈதலாவது அருள் செய்தல் அல்லது கொடுத்தல் என்று பொருள் படும். அதாவது உலகத்தாருக்கு பயன்படும் வண்ணமாக நம் உடல் பொருள் ஆவி மூன்றையும் தத்தம் பண்ணிவிடுதல்; நமது பொருளாலும் வாக்காலும் மனத்தாலும் உடற் செய்கையாலும் பிறருடைய கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கினியன செய்தல், பொருள் கொடுப்பது மாத்திரமே ஈகையென்று பலர் தவறாகப் பொருள் கொள்ளுகறிார்கள். பிறர் பொருட்டாக நம் உயிரைக் கொடுத்தல் கொடையன்றோ வைத்தியம் முதலிய சிகிச்சைகளால் பிறருக்குப் பிரான தானம் செய்தல் ஈகையன்றோ பொருள் முதலிய நலங்களை யெல்லாம் ஒருவன் தனக்குத் தானே சேகரித்துக் கொள்ளக்கூடிய திறமை அவனுக்கு ஏற்படும்படி அவனுக்கு கல்வி பயிற்றுதல் தானமாகாதோ’

எனவே கைம்மாறு கருதாமல் பிறருக்கு எவ்விதத்திலேனும் செய்யப்படும் பிறருக்கு எவ்விதத்திலேனும் செய்யப்படும் கஷ்ட நிவாரணங்களும் அனுகூலச் செய்கைகளும் ஈகை எனப்படும். இதுவே மனிதனுக்கு இவ்வுலகத்தில் அறம் அல்லது தர்மம் அல்லது கடமையாம். இனித்திய செயல்கள் செய்யாதபடி எவ்வகைப்பட்ட அறிவு பயிற்சியாலேனும் சரிர முயற்சியாலேனும் சேகரிக்கப்படும் உணவு துணி, முதலிய அவசியப் பண்டங்களும் குதிரை வண்டிகள், ஆபரணங்கள், வாத்தியங்கள் பதுமைகள் முதலிய செளக்ய வஸ்துக்களும், இவைகளை அனுபவிப்பதற்குச் சாதனங்களாகிய வீடு, தோட்டம் முதலியனவும் இப்பண்டங்களுக்கெல்லாம் பொதுக்குறியீடும் பிரதியுமாக மனிதரால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கும் பொற்காசு, வெள்ளிக்காசு. காயிதப்பணம் முதலியனவும் செல்வம் அல்லது அர்த்தம் எனப்படும். நற்செயல்களாலே சேர்க்கப்படம் பொருளே இன்பத்தைத் தருவதாகையாலும், தீச் செயல்கள் செய்து சேர்க்கும் பொருளு’ பலவிதத்

74