பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரிந்திருக்கிறார்.

ஒருவன் ஒருத்தியிடத்திலும் ஒருத்தி ஒருவனிடத்திலும் மனத்தாலும் வாக்காலும் செய்கையாலும் கற்பு நெறி தவறாமல் நித்தியப் பற்றுதலுடையோராய் மன ஒருமையெய்தித் தம்முள் ஆதரவுற்றுத்துய்க்கும் இன்பமே இன்பமெனத்தகும் என்று ஒளவையார் கூறுகிறார்.

இனி முக்தியாவது யாதெனில், கடவுளை உள்ளத்திலிருதித் தானென்ற கொள்கையை மாற்றி ஈசபோதத்தை எய்தி மேற்கூறிய மூன்று புருஷார்த்தங்களிலும் பொறுப்பு இங்கியிருப்பதே முக்தி. இந்த முக்தி பெறுவதனால் ஒருவன் மற்ற மூன்று புருஷார்த்தங்களிலும் எவ்விதமான சம்மந்தமும் இல்லாமலே செய்கையற்று மடிந்து கிடப்பனனென்றெண்ணுதல் பெருந்தவறு. உயிருள்ள வரை ஒருவன் தொழில் செய்யாதிருக்கக் கடவுளுடைய இயற்கை இடங்கொடாது ‘யாவனாயினும் (மனத்தாலேனும், வாக்கா லேனும் உடம்பாலேனும்) யாதேனுமொருவிதமான செய்கை செய்து கொண்டிராமல் சும்மாயிருத்தல் ஒரு கூடிணம் கூட சாத்தியப்படாது. இயற்கையிலேயே பிறக்கும் குணங்களால் ஒவ்வொருவனும் தன் வசமின்றியே எப்போதும் தொழில் செய்து கொண்டிருக்கும்படி வற்புறுத்தப்படுகிறான் என்று கண்ணபிரான் பகவத் கீதையில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

இன்னும் ஒளவைப்பிராட்டியின்நூல்களிலுள்ள வசனங்களை உதாரணம் காட்டி அவருடைய மகிமைகளையெல்லாம் விளக்கிக் கூற வேண்டுமாயின் அதற்கு எத்தனையோ சுவடிகள் எழுதியாக வேண்டும். நமது வியாசமோ ஏற்கனவே மிகவும் நெடிதாய் விட்டது. ஆதலால் இந்தக் கவியாசியைக் குறித்து தற்காலத்தினர் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களில் மிகவும் முக்கியமாக எனக்குத் தோன்றுவனவற்றை மற்றொரு வியாசத்தில் சுருக்கமாகச் சொல்ல உத்தேசம் கொண்டிருக்கிறேன் என்று மகாகவி குறிப்பிடுகிறார்.

  • தமிழ்நாட்டு மாதராகிய என் அன்புக்கும் வணக்கத்துக்குரிய சகோதரர்களே இத்தனை பெருமை வாய்ந்த தமிழ் நாகரிகத்தின் எதிர்கால வாழ்வு உங்களுடைய பயிற்சிகளையும் முயற்சிகளையும் பொருத்திருக்கிறது. பூமண்டலத்தில் நிகரில்லாத அருஞ்செல்வமுடைய சேமநிதி ஒன்றுக்குக் கடவுள் உங்களை காவலாக நியமித்திருக்கிறான். மனித உலகமே இந்த நேரத்தில் பிரம்மாண்டமான சண்டமாருதங்களைப் போன்ற பறுதல்களாலும் கிளர்ச்சிகளாலும் புரட்சிகளாலும் கொந்தளிப்புள்ள ச. வி ைப்பட்ட தொரு சிறுதோணி போல அலைப்புண்டும் புள்ளுண்டும் பேதுண்டும் எஏற்றுண்டும் சுழற்றுண்டும் தத்தளிக்கிறது. இந்த மகாபிரளய காயத்தில் தமிழ் நாகரிகம் சிதறிப் போகாதிருக்கும்படி கடவுள் அருள் பகுக அஃது அங்ஙனம் சிதறாமலிருக்குமாறு தகுந்த கல்விப்

76