பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன மிகப் பழைய வெள்ளைத் துணி உடுத்து உடல் வேர்க்க உட்கார்ந்து கொண்டு, இன்ன ஊரில் இன்ன தேதி, இன்னாருக்கு சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றிச் சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலேயிருந்து கொண்டு தமக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாரகள். சுமங்கலிப் பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலை குனிந்து நின்று கொண்டு போவோர் வருவோரை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில உத்தயோகஸ்தர் தலைப்பாதை, கோட்டு, கொடியரச் சங்கிலி சகிதமாக உலாவுகிறார்கள். சில போலீஸ்காரர்கள் சக்கரவர்த்திகளைப் போலத்தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். சில முகமதிய ஸ்திரீகள் முட்டாக்கு போட்டுத்தலையையும் முகத்தையும் மூடிக் கொண்டு திசைக் கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேங்குழல், சுசியன், காப்பி முதலியன வியாபாரம் செய்யும் ஒரிரண்டு பிராமணர்களும் சூத்திதரும் பகற்கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது காசு பெறாத சாமானர்களுக்கு மும்மடங்கு நான்மடங்கு விலை வைத்த விற்றுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று வேடிக்கையும் உண்மையும் கலந்த ஒரு இயற்கைக் காட்சியை சமூகக் காட்சியை, ஒரு அரசியல் காட்சியை, ரயில் நிலையத்தின் சிறு வியாபாரக் காட்சியை ஒரு முகமதியப் பெண்கள் காட்சியை மிக அற்புதமாக சிறிய சொற்களில் எளிய தமிழ் வழக்கில் எடுத்துக்கூறுகிறார்.

இனி ஒரு முகமதிய கனவாறுடைய சிறிய வரலாறு தொடங்குகிறது. அவருடைய சிறிய வரலாற்றை மகாகவி பாரதியார் மிக அற்புதமாக எடுத்துக் கூறுகிறார்.

இக்கதைத் தொடரில் மகாகவி பாரதியார், பெண்களின் சம உரிமைப் பிரச்சினையை மனதிற் கொண்டே பல கருத்துக்களையும் வெளிப்படுத்து கிறார் என்று தெரிகிறது.

“மத விஷயங்களை அதாவது அல்லாவிடம் செலுத்த வேண்டிய பக்தி முதலில் விஷயங்களைத்தவி, விவாகம் ஸ்திரிகளை நடத்த வேண்டிய மாதிரி. முதலிய ஜன சமூகத்தின் ஆசார நியமங்களில் காலத்திற்குத்தக்கப்படி புதிய மாறுதல்கள் செய்து கொள்ளலாம் என்பது மகாகவியின் கருத்தாகத் தெரிகிறது.

பல முஸ்லிம் நண்பர்களிடமும் ஆசார விவரங்களைக் காலதேச வர்த்தமானங்களுக்குப் பொந்தும்படி மாற்றலாம். மாற்றிக் கொள்ளலாம் என்னும் கருத்தை பலரும் ஏற்றுக் கொள்ளலாம் என்பதே மகாகவி பாரதியாரின் கருத்தாகத் தெரிகிறது.

78