பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோருக்கு ஈசன் தானாகவே வீட்டு நிலையருள் செய்வான் தமிழா உனது புருஷார்த்தங்கள் கை கூடுக” என்று மகாகவி எழுதுகிறார்.

இந்தக் கட்டுரை ஒரு அற்புதமான கட்டுரையாகும். இதை விரித்தால் பல பக்கங்கள்எழுத வேண்டியதிருக்கும். முதலாவதாக தமிழருக்காக சில அறிவுரைகள் கூறுகிறார். அந்த அறிவுரைகள் தமிழருக்கு என்று குறிப்பிட்டிருந்தாலும் அது அனைத்து மனிதருக்கும் பொருந்தும், குறிப்பாக

அனைத்து பாரத மக்களுக்கும் தேவைப்படுவதாகும்.

இக்கட்டுரையில் நான்கு புருஷார்த்தங்களைப் பற்றி பாரதியார் கூறுகிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் குறிப்பிட்டு அவைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார்.

வடமொழியில் இந்த நான்கு புருஷர்த்தங்களையும் தர்மம், அர்த்தம், காம், மோட்சம் என்று குறிப்பிடுகிறோம். இந்த நான்கு புருஷார்த்தங்களும் பாரதம் முழுமைக்கும் பொதுவானதாகும். பாரத நாட்டில் அனைத்து மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் பொதுவானது.

இதில் தர்மம் என்னும் சொல்லும் அர்த்தம் காமம் மோட்சம் என்னும் சொற்கள் வடமொழியிலும் பாரத நாட்டின் இதர மொழிகளிலும் பொதுவாகக் கூறப்படுகின்றன. தமிழில் அவைகளை அறம், பொருள், இன்பம், வீடு என்று குறிப்பிடுகிறோம். இந்த சொற்களுக்கு ஈடாக முழு அர்த்தத்தைத் கொடுக்கக்கூடிய சொற்கள் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இது பாரத நாட்டு மொழிகளுக்குள்ள தனித்தன்மையாகும். தனிச்சிறப்புமாகும்.

இந்த புருஷார்த்தங்களில் முதலாவதாக வருவது தர்மம். அறம் இதன் விரிவு என்ன? மகாகவி பாரதியார் குறிப்பிடுவது இவற்றுள் அறமாவது (தர்மம் என்பது) கடமை அது உனக்கும், உனது சுற்றுத்தாருக்கும் பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை பிறர் என்பதனுள் வையகம் முழுதும் அடங்கும் என்று மகாவியே குறிப்பிடுகிறார்.

மனிதன் பிறபெருக்கும் போது அவன் இவ்வுலகில் வாழும் போது ஒவ்வொருவருக்கும் கடமை ஏற்படுகிறது.

மனிதனுக்கு ஆணாயினும் பெண்ணாயினும் பருவங்கள் நான்கு. பிரம்மாச்சரியம் இல்லறம், வானப்பிரஸ்தம் சந்நியாசம் இந்த நான்கு பருவங்களுக்கும் உரிய கடமைகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. தன் பால், தன் குடும்பத்தின் பால், பெற்றோர் பால், குழந்தைகளின் பால் உடன் பிறந்தோர் பால், சுற்றத்தார் பால், ஊரின் பால், சமுதாயத்தின் பால் நாட்டின் பால் உள்ள.... ஏற்படுகின்றன. அவைகளை நிறைவேற்ற வேண்டும். இவை மிக விரிவான முறையில் அமைந்துள்ளன.

83