பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனது கர்நோயைத் தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட் ருளினார்.

சந்திகளில் ஒரு களங்கம்

ஆனால் தீர்க்கக்கூடியது

சந்திரனுக்குள் ஒரு களங்கம் இருப்பது போல் இப்போது நம்முடைய கூட்டத்தில் ஒரு களங்கமிருக்கிறது. ஆனால் பூத சந்திரனில் உள்ள களங்கத்தை அதுதானே மாற்றிக் கொள்ளாது. ஞான சூரியராகிய ஹிந்துக்கள் தமக்குள்ள குறையை விரைவாக நீக்கி வருகிறார்கள். அந்தக் களங்கமாவது நமது ஜாதிக்கட்டிலுள்ள சில வழக்கங்கள். மறுபடி தெய்வத்தை நம்பி எல்லோரும் இன்புற வேண்டி குண கர்மங்களால் வர்ண நிச்சயம் செய்து கொண்டு பூமண்டலத்துக்கு ஞானோபதேசம் செய்யும் பொருட்டாகப் பாரத தேவி தனது பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். காலம் ஹிந்துக்களின் சார்பில் வேலை செய்கிறது. தேவர்களெல்லோரும் ஹிந்துக்களைக் கைதுக்கி விடப் புறப்பட்டிருக்கிறார்கள். பரமாத்மா ஒன்று அவனுக்குரிவிகள் பல பெயர் சொல்லிப் போற்றுகிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது.

‘பேரானந்தம் பேசி மறையனந்தஞ் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பு

என்று தாயுமானவர் காட்டினார்.

ராமகிருஷ்ணர் இதையே சொன்னார். இந்த உண்மை ஹிந்துக்களுடைய புத்தியில் வேரூன்றி விட்டது. எனவே கவி நீங்கிவிட்டது’ என்று மகாகவி குறிப்பிடுகிறார். மேலும் கூறுகிறார். இந்த தேசம் ஒரு தேவலோகத்துப் பலாப்பழகம் போலாகி விட்டது. இனியென்றும் அழியாத பலாப்பழம். ஒவ்வொரு ஆர்யனும் அதில் முளைத்தவன் நாம் எல்லோரும் சேர்ந்து அந்தப் பலாப்பழத்தின் மேல் தோல். உள்ளே ஞானச்சுளை நமக்கு அழிவில்லை. நமக்குள்ளே பிரிவில்லை. நாம் ஒன்று. நாம் எப்போதும் தெய்வத்தை நம்புகிறோம். தெய்வத்தை நம்பி நாம் அறத்தைச் செய்தால் நம்முடைய யோக rேமங்களைத் தெய்வம் ஆதரிக்குமென்று பகவத்கீதை சொல்லுகிறது என்று மகாகவி பாரதி எழுதுகிறார்.

துாற்றல்:

ஓயாமல் துற்றல் போட்டால் அது மழையாக மாட்டாது. சிணங்கல் மழையினால் செடுதல்தான் உண்டாகும். தூற்றலாகத் தொடங்கியது மழையாக விரைவிலே பெய்த முடித்துவிட வேண்டும். ஒரு நல்ல காரியம் செய்யத் தொடங்குவோன் அதை ஒரே நீட்டாக வருஷக்கணக்கில் நீட்டி மற்றவர்களுக்கு அதுவே ஒரு தீராத தொல்லையாகும்படி செய்யலாகாது “சுபஞ்ச சீக்கிரம்’ நன்மையைத் துரிதப்படுத்த வேண்டும்.

தமிழ் வசன நடை: *

85