பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வசன ந ைஇப்போது தான் பிறந்தது. பல வருஷமாகாவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால் இப்போதே நமது வசனம் : லகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயறசிகள் செய்ய வேணடும் கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் எழுதினாலும் சரி. ஒரு கதை. அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது’ என்று மகாகவி குறிப்பிடுகிறார்.

‘வசன நடை என்பது கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு ஒளி, தன்மை, ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமாவதுதட்டுத்தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை, நமது தற்கால வசன நடையில் சரியான ஒட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும் என்றும் மகாகவி குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டிலே புஸ்தகப் பிரசுரம்

தமிழ்நாட்டில் புஸ்தகம் எழுதுவோரின் நிலைமை இன்னும் சீராக வில்லை பிரசுரத் தொழிலை ஒரு வியாபாரமாக நடத்தும் முதலாளிகள் வெளிப்படவில்லை யாதலால் சங்கடம் நீங்காமலிருக்கிறது புதிய புஸ்தங்களைப் படித்துப் படித்து ‘பயன்படுமா படாதா வென்று தீர்மானம் செய்ய வேண்டும் ‘நன்றாக விலையாகுமா? விலையாகாதா? என்பதை ஊகித்தறிய வேண்டும். ஆச்சர்யரிடமிருந்து புஸ்தகத்தை முன் விலையாகவே, வேறுவித உடன்பாடாகவோ வாங்கிக் கொண்டு தாம் கைம்முதல் போட்டு அச்சிட்டு லாபம் பெற வேண்டும். இந்த வியாபாரத்தை நமது தேச முதலாளிகள் தக்கபடி கவனியாமலிருப்பது வியப்பை உண்டாக்குகிறது. புஸ்தகங்கள் வெளிவரத்தான் செய்கின்றன. பெருந்தொகையான ஜனங்கள் வாங்கிப்படிக்கத்தான் செய்கிறார்கள். ஒரு ஒழுங்கான பிரசுர வியாபாரம் நடந்தால் ஜனங்களுக்கு நல்ல புஸ்தகங்கள் கிடைக்கும். இப்போது அச்சிடப் பணமுள்ளவர்கள் எழுதும் புஸ்தகங்களே பொது ஜனங்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பழைய புஸ்தகங்களிலே ஆச்சர்யமானவை பல எழுதப்பட்டகாலத்தில் ஆசிரியர்தன வந்தவராக இருந்ததில்லை. மேன்மேலும் ஊக்கத்துடன் நடத்தினால் பிரசுர வியாபாரத்தில் நிறைய லாபம் உண்டாகுமென்பதில் சந்தேகமில்லை’ என்று அக்காலத்தில் தமிழ் நாட்டில் நிலவிய புஸ்தக பிரசுக நிலைமை பற்றி தனது சொந்த அனுபவத்தை வைத்தும் மகாகவி பாரதியார் எழுதுகிறார். கடந்த ஒரு நூற்றாண்டில் இந்தத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் இத்துறையில் தமிழ்நாட்டில் இன்னும் அதிக முன்னேற்றம் ஏற்பட வேண்டியதிருக்கிறது.

86