பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போத்தண்ணா என்ற தெலுங்குக் கவிராயர்

சென்னை பட்டனத்திலிருந்து பம்பாய்க்கு போகும் (மதராஸ் தென் மராட்டிய) ரெயில் பாதையில், வொண்டி பிட்ட’ என்றொரு ஸ்டேஷன் இருக்கிறது. அதற்குப் பக்கத்திலுள்ள வொண்டி மிட்ட என்னும் ஊர் மிகவும் அழகுடையது. வொண்டி மிட்ட’ என்றால் ஒற்றை மலை’ என்று அர்த்தம் ஒற்றைக் குன்று. அதனடியிலே பெரிய ஏரி. மேலே இராமலிங்கேசர் ஆலயம் தெலுங்கு பாஷையில் மிகச் சிறந்த காவியமாக ஸ்ரீபாகவதத்தை எழுதிய ‘போத்தன்னா என்ற மகாகவி அந்த ஊரிலே பிறந்தவர். இவருடைய பாகவதம் நம்முடைய இராமாயணத்தைப் போல சம்ஸ்க்ருத நூலைத் தழுவி எழுதப்பட்ட வழி நூல். ஆயினும் படிப்பவருக்கு முதனுாஸ்த்தனை பெருமை தோன்றும்படி அமைந்திருக்கிறது. நாம் கம்பராமாயணத்தைக் கொண்டாடுவது பாகவதத்தைக் கொண்டாடுகிறார்கள். சில தினங்களின் முன்பு ஹிந்து பத்திரிகையில் மேற்படி போத்தன்னாவைப் பற்றி கும்பகோணம் இங்கிலிஷ் ஸ்ரீ வெங்கடேசய்யர், என்பவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ‘போத்தன்னா'வின் ஜன்ம நசrத்திரத்தைக் கண்டுபிடித்து அதனை வொண்டி மிட்டா வில் வருந்தோறும் கொண்டாட வேண்டு மென்றும் அதற்குத் தெலுங்கு தேசத்திலும் வெளிப்பக்கத்திலுமுள்ள ஆந்திய பாஷாபிமானிகள் எல்லோரும் வந்து கூட வேண்டுமென்றும் ரீ வெங்கடேசய்யர் செல்லுகிறார். அவருடைய ஜன்ம நகrதிரம் நிச்சயமாகத் தெரியாத பட்சத்தில் ரீகிருஷ்ண ஜயந்தியன்று அவர் ஞாபகத்தைக் கொண்டாடலாமென்கிறார். இது சரியான வார்த்தை.

கம்பர், திருவள்ளுவர் இளங்கோ

ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பர் இல்லை. தமிழ்நாட்டு வீரருக்கும், கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித்தவர் ஒரிருவர் தோன்றினாலும் அவர்களுக்கு தக்க மதிப் பிராது. பண்டய காலத்துக்கு சக்தி மான்களை வியப்பதும் அவர்களுடைய தொழிற்பெருமையை உலகறிய புழக்குவதும் கூடிய வரைபின்பற்ற முயல்வது மாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்.

‘எதை விரும்புகிறோமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது. பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்து விடப்படும். அறிவு ைபோரையும் லோகோபகாரிகளையும் வீரரையும் கொண்டாடத தேசத்தில் அறிவும் லோகோபகாரமும் வீரமும் மங்கிப் போகும். தமிழ்நாட்டில் இப்போது ‘புதிய உயிர்’ தோன்றியிருப்பதால் நாம் இவ்விஷயத்தில் தாமே குணஞ்

87