பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செலுத்தாமல் கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகாகவிகளுக்கு ஞாபகச் சிலைகளும் வருஷோத்ளபவங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். திருவள்ளுவர், மயிலாப்பூரிலே பிறந்தவர். அங்கே திருவள்ளுவர் கோயில் இங்போது இருக்கிறது. ஜன்ம தினம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு வேளை அந்தக் கோயிற் பூசாரிக்குத் தெரியக்கூடும்.

ஐந்து மகாகாவியங்களிலே சிறந்த தாய் சிலப்பதிகாரம் செய்த இளங்கோ முனிவர். வஞ்சி நகரத்தில் பிறந்தவர். இந்த வஞ்சி நகரம் இப்போது திருச்சிராப்பள்ளிக்கு அருகேயுள்ள கரூர் என்று பண்டிதமு ராகவய்யங்கார் தீர்மானம் செய்கிறார். இந்த ஆசியரது ஜன்ம தினத்தையும் நிச்சயமாகச் சொல்வதற்கு வழியில்லை. மயிலாப்பூர், திருவள்ளுவர் கோயிலைச் செம்மையாகக் கட்ட வேண்டும். இப்போது மிகவும் ஏழை நிலைமையில் இருக்கிறது. திருவெழுந்துாரிலும், கரூரிலும் ஞாபச் சின்னச் சின்னங்கள் ஏற்படுத்த வேண்டும். ஜன்ம தினங்கள் நிச்சயப்பட்ட வழியில்லை. ஆதலால் சரஸ்வதி பூஜைக்கு முன்பு அல்லது பின்பு குறிப்பிட்டாதாரு தினத்தில் இந்த மகான்களின் ஞாபகத்தைக் கொண்டாடுதல் பொருத்தமுடைய செய்கையாகும். நவராத்திரி உத்ஸவங்கள் நமக்குள் வழக்கமாக உள்ளதால் அந்த சமயத்தையொட்டி நமது மகாகவிகளுக்குத் திருவிழா கொண்டாடுதல் சுலபமாக இருக்கும்.

பண்டித சபைகளையும் பொது ஜன ஆர்வாரங்களையும் கோலாலமாக நடத்தி எல்லா வர்ணத்தாரும் எல்லா மதஸ்தரும் சேர்ந்தால் சந்தோஷமும் அறிவுப்பயனும் உள்ள மாண்பும் பெற இட முண்டா குழு பதபோதங்கள் பாராட்ட இடமில்லாத திருவிழாக்கள் தமிழ்நாட்டில் எவ்வளவு அவசியம் என்பதை ஒவ்வொரு அறிவாளியும் அளிதாக ஊகித்துக் கொள்ளலாம்’ என்ற மகாகவி பாரதியார் எழுதுகிறார்.

மகாகவியாரின் இந்தக் கருத்து தமிழகத்தில் மிகுந்த பலனளித்திருக்கிறது. தமிழ் நாடெங்கும் இன்னும் பாரத நாட்டின் முக்கிய நகரங்களிலும், திருவள்ளுவர், கம்பர் இளங்கோ, பாரதி, பாரதிதாசன் மற்றும் பல தமிழ்ப்புலவர்களுக்கு சபைகளும் சங்கங்களும் அமைந்து விழாக்கள் ந ைபெறுகின்றன. அவை மேலும் விரிவடைந்து வருகின்றன. இந்த விழிப்புணர்வு மேலும் விரிவுபடும் என்பதில் ஐயமில்லை. தமிழ் உணர்வு மேலும் அதிகரித்து வருகிறது மகிழ்ச்சி . தமிழ் வளர்ச்சிக்காக:

‘நமது ஜனத்தலைவர்கள் இங்கிலிஷில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிப்பது நமது பாஷை பேன்மைப்பட்ட இடமில்லை என்று ாகவி பாதியார் குறிப்பிடுகிறார். மேலும், சபைகள், வங்கங்கள், பொதுக்கூட்டங்கள், வருக்ஷோத்தளபவங்கள், பழஞ்சுவடிகள், சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாவை வளர்ச்சிக்கு நல்ல

88