பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுவதுமாக இருக்கிறது.

ஒரு தேசத்தின் பொது புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால் அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்மஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாச்சாரப் பத்திரிகைகளையும் ஒரடையாளமாகக் கருதத்தகும். ஆனால் ஐரோப்பா, அமெரிக்கக் கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ் நாட்டுப் பத்திரிகையை ஒறப்பிட்டுப் பார்த்து இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு ஆகா இப்படிப்பட்ட தமிழ்நாடு எங்கே பிழைக்கப் போகிறது” என்று எனினப் பாடும் நெஞ்சு உடைந்து போக வேண்டாம். ஏனென்றால் வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று. பிறரிடமிருந்து கற்றுக் கொண்ட தந்திரம் சென்ற முப்பது வருஷங்களாகத் தான் தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சரியாக முதிர்ச்சியடைய வில்லை. தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனை கெத்தனை மதிப்பு கொடுக்கிறார்களோ, அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி அதனால் பத்திரிகைகளுக்குத் தகுந்தலாப முண்டாய் அதிலிருந்து சரியான வித்வான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும்.

தமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடையதன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. ‘தமிழ் முழு நாகரிகமுடையதா இல்லையா’ என்பதைப் பற்றிச் சந்தேகங்களுடையது. ஆதாலால், தமிழ் படிப்பில்லாமலும் தமிழ் மணமில்லாமலும் ஸ்தோஷம் அடைந்திருக்கும் இயல்புை டயது.

இங்கிலாந்தில் வர்த்தமானப் பத்திரிகைகள் பிரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபநியாசங்களையும், பெரிய சாஸ்திரியார், பெரிய கைத் தொழில் நிபுனர், திரவிய சாஸ்திர நிபுணர், ஜனத்திருத்தத்தலைவர் முதலியவர்களின் உபந்நியாசங்களையும் பலபிரஞ்சு ராஜாங்க சம்பந்தமான விவகாரங்களையும் பிரபஞ்சு பத்திரிகைகளிலிருந்து மொழி பெயர்த்துப் போடுகின்றன. அப்படியே பிரான்ஸ் தேசத்து பத்திரிகைகள் ஜெர்மன் பாஷையிலிருந்து பல விஷயங்களை மொழி பெயர்த்து எழுதுகின்றன. ஆனால் அந்த மொழி பெயர்ப்புகளில் ஸ்வபாஷையின் வழக்கங்களையும் பிரயோகங்களையும் கைவிட்டு அன்னிய பாஷையின் வசன நடையைப் பின் பற்றும் வழக்கம் கிடையாது.

ஆனால் தமிழ்நாட்டிலோ முழுவதும் தமிழ்நடையை விட்டு இங்கிலிஷ் நடையில் தமிழை ழுெதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப் போகிற விஷயத்தை இங்கிலிஷ்

90