பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு, அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும். உனக்கு இஹபாஷே மங்களுக்கு இட முண்டாகும். இல்லாது போனால் நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல் கே பாகிறது. சில சமயங்களில் சில பத்திரிகைகளை வாசித்துவிட்டு நான் “ஐயோ, இவ்வளவு காயிதத்தில் எத்தனையோ உண்மைகளும், எத்தனையோ ஆச்சரியங்களும், எத்தனையோ சந்தோஷங்களும் எழுதலாமே? என்று எண்ணி வருத்தப்படுவதுண்டு. தமிழில் சாஸ்திர பரிபாஷை

தமிழ் மொழியில் அறிவியல் துறைகள் பற்றிய நூல்கள் வெளிவர வேண்டும். இன்றும் கூட சட்டம், வைத்தியம், மருந்தியல், பொரியியல் மற்றும் பல அறிவியல் துறை நூல்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. அவை ஆங்கிலத்திலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன.

ஆட்சி மொழி, பயிற்சி மொழி, நீதிமன்ற மொழி ஆகிய துறைகள் மற்றும் அனைத்து துறைகளிலும் தமிழ் மொழியைக் கொண்டு வர வேண்டும் என்று 1957 ஆம் ஆண்டிலேயே தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் என்னும் ஒரு சட்டம் நிறை வேற்றப்பட்டது. ஆயினும் தமிழ்மொழியை தமிழ்நாட்டில் அனைத்துத்துறைகளிலும் செயல்படுத்துவது என்பது நடைபெறவில்லை. இதற்கு ஆட்சியாளர்கள்தான் முதல் காரணம்.

தமிழில் சாஸ்திர பரிபாஷை என்னும் தலைப்பில் மகாகவி பாரதி நூற்றாண்டுகளுக்கு முன்பே கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

“பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே, நம்மைக் காட்டிலும் ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும் லெளகீத சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டுமென்று பல பண்டிதர்மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். ஏற்கனவே சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன் மேலும் வளரும் வளர்ந்து தீர வேண்டும். அந்த சாஸ்திரங்களை யெல்லாம் ஏககாலத்தில் தமிழில் எழுதி முடிப்பதற்காக ஒரு பண்டித சங்கம் ஏற்படக்கூடும். நமது ராஜாக்களுக்கும், ஜமீன்தாரர்களுக்கும் செட்டிகளுக் கும் (செல்வந்தர்களுக்கும் நல்ல புத்தியுண்டாகித் தமிழில் நவீன சாஸ்திரம் சேர்ப்பதாகிய காரியத்தை அவர்கள் தக்க பண்டிதர்களின் உதவி கொண்டு, விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக்கூடும்.

இதுபற்றி அரசாங்க அளவில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக் கின்றன. அவை முழுமை பெறவில்லை. போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

91