பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது நாட்டு மொழிகள் நன்கு வளர்ச்சி பெற்றவை. சம்ஸ்க்ருதமும் தமிழும் செம்மொழிகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இரு மொழிகளும் பழமைமிக்கவை சிறந்த இலக்கணம் கொண்டவை சிறந்து பண்டைய பேரிலக்கியங்களும் நவீன இலக்கியங்களும் கொண்டவை. இவை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ராஜஸ்தானி, பஞ்சாபி, காஷ்மீர், இந்தி, உருது, ஒரியா, வங்காளி, அஸ்சாமி, மணிப்பூர் முதலிய பதினெட்டு மொழிகள் வளர்ச்சியடைந்த மொழிகளாக மக்களிடம் அந்தந்தப் பகுதிகளில் ஆட்சி மொழிகளாகவும், பயிற்சி மொழிகளாகவும் நீதிமன்ற மொழிகளாகவும் நிலை பெற்றிருக்கின்றன. மேலும் அம்மொழிகளும் சிறந்த இலக்கண இலக்கியங்கள் நிறைந்த வளர்ச்சியடைந்த மொழிகளாக நிலை பெற்று வருகின்றன.

இந்திய மொழிகளுக்கு இடையில் இன்னும் அதிகமாக நெருக்கமும் தொடர்பும் இணைப்பும் ஏற்படுமானால் அம்மொழிகள் மேலும் வளர்ச்சியடையும், செழிப்படையும்.

பாரத இசை

இந்திய இசையில் கர்நாடக சங்கீதமும் இந்துஸ்தானி இசையும் மிகவும் பிரபலமானது. விஞ்ஞான பூர்வமாவது. இன்று உலகில் மிகச்சிறந்த இசைகளில் ஒன்றாக இசையுலகில் நிலை பெற்றிருக்கிறது. இந்திய நாடு அடிமைப்பட்ட போது இங்கு அந்நிய ஆட்சி ஏற்பட்ட போது நமது கல்வி, கலாச்சாரம் இசை முதலிய அனைத்தும் மங்கிப் போயிருந்தது. நமது இசையும் முழுமையாக விடுதலை பெற்று ஒளி வீசிச் சிறக்க வேணடும் என்பதைப் பற்றி மகாகவி பாரதி பேசுகிறார்.

மகாகவி பாரதி ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல. சிறந்த தமிழ்ப்புலவர். நல்ல இசைஞானி. நல்ல குரல் வளம் கொண்டவர் மெட்டிசைத்து நன்கு பாடவல்லவர். கர்நாடக இசையில் கைதேர்ந்தவர்.

மகாகவி பாரதியார் பாடியுள்ள பாடல்கள் பலவற்றிற்கும் ராகம் தாளம் அமைத்துக் கொடுத்துள்ளார். அப்பாடல்கள் எல்லாம் நன்கு இசையமைத்து இராகம் தாளத்துடன் பாட வல்லது.

மகாகவி “சங்கீத விஷயம்’ என்னும் தலைப்பில் மிகச்சிறந்த கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அந்தக் கட்டுரை அவருடைய இசை ஞானத்திற்கும் தமிழ் வசன நடைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

அந்தக் கட்டுரை மூலம் மகாகவி பாரதி பேசுகிறார்.

“இங்குள்ள ஜந்துக்களிலே மனிதருக்கும் பறவைகளுக்கும் தான் பாடத் தெரியும் மற்ற மிருகங்களுக்கு பாட்டு வராது. பறவைகள் வானத்திலே பறக்குமு’ வழக்கமிருப்பதால் அவற்றின் மனநிலை சங்கீதத்திற்கு

92