பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியும். கீர்த்தனத்தில் ராக தாளங்களை இசைக்கிற மாதிரியிலேயே அர்த்தம் தொனிக்க வேண்டும். அதைத்தான் ரஸ்ச்சேர்க்கை என்று சொல்லுகிறோம். இதிலே தியாகய்யர் மிகவும் சிறப்புக் கொண்டவர்ன்ெறு மகாகவி பாரதிதன் காலத்திய கர்நாடக சங்கீதத்தைப்பற்று எழுதுகிறார்.

ஆயினும் கடந்த நூற்றாண்டு காலத்தில் கர்நாடக சங்கீதத்தையும் சங்கீதப் பயிற்சியையும் முன்னுக்குக் கொண்டு வருவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. புதிய பல இளம் வித்வான்கள் ஏராளமாகத் தோன்றி முன்னுக்கு வந்திருக்கிறார்கள். தமிழில் கீர்த்தனைகள் ஏராளமாக வந்து பழக்கத்திற்கு வந்திருக்கிறது. சபாக்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு கர்நாடக சங்கீதம் அதிகமாக விரிவுபட்டு வருகிறது. தமிழ் இசைக்கு மதிப்பும் மரிதையும் அதிகரித்து வருகிறது. இசைப்பயிற்சி, பள்ளிகள் கல்லூரிகள் இசையை வளர்க்க முன்வந்துள்ள பல்கலைக்கழகங்களும் இந்தத் துறையில் அதிகமுனைப்புக்காட்டி வருகின்றன. சினிமாவின் வளர்ச்சியும் இசையின் வளர்ச்சிக்கு தனது பங்கை ஆற்றி வருகிறது.

கர்நாடக சங்கீதம் தவிர இதர பாட்டு வகைகளும் தமிழகத்தில் பரவியிருந்தது. இதுபற்றியும் மகாகவி பாரதி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

கும்பிப்பாட்டு, பல்லிப்பாட்டு, கிளிப்பாட்டு, நலங்குப்பாட்டு, பள்ளியறைப்பாட்டு, அம்மானைப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு முதலிய பெண்களுடைய பாட்டெல்லாம் மிகவும் இன்பமான வர்ண மெட்டு, தமிழர்களின் தாய், அக்காள், தங்கை, காதலி முதலிய இவர்கள் பாடும் பாட்டு மறக்கக்கூடிய இன்பமா? ஞாபம் இல்லையா?

தமிழ்ப் பெண்களின்பாட்டைக் கையெடுத்துக் வணங்குகிறோம். ஆனால் அதில் ஏற்படுத்தவேண்டிய சீர்த்திருத்தங்கள் இருக்கினறன. பெண்களின் பாட்டு

தமிழ் நாட்டுப் பெண்கள் பாடும் பாட்டு வகைகளைப் பற்றி மகாகவி

குறிப்பிடுகிறார். அவையெல்லாம் இன்று நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை. o

இரு பாலருக்கும் பொதுவான சந்தங்கள் இருப்பதுடன் பெண்களுக்கு மாத்திரம் சிறப்பான பாட்டுகளும் சந்தங்களும் இருக்கின்றன. பண்டைத் தமிழ் நாட்டு மாதர் பாடிக் கொண்டிருந்த பல பாட்டு வகைகள் இப்போது வழக்கின்றி இறந்து போய்விட்டன.

ஆனால் ஜீவன் பெண் என்றும் பரமாத்மா ஆணென்றும் பாவனை செய்து பழைய பக்தர் பாடியிருக்கும் பாட்டுக்களில் பெண்களுக்குரிய சில பாட்டு வகைகள் காணப்படுகின்றன.

95