பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஷ்டாந்தமாக திருவாசகத்திலே பின் வரும் வகைள் காணலாம்.

1. எம்பாவை (பெண்கள் நீராடப் போவது)

2. அம்மானைப் பாட்டு

3. தும்பி, குயில், கிளி முதலிய துதுப் பாட்டுகள்

4. தெள்ளேனம் (நடுவே ஒரு பெரிய முரசை வைத்துக் கொண்டு பெண்கள் சுற்றியிருந்து இரண்டு கைகளிலும் கோல் கொண்டு கொட்டி அந்தத் தாளத்திற்கு இசையைப் பாடுதல்.

5. சுண்ணம் இடித்தல். (சுண்ணம் என்பது கந்தப்பொடி)

6. சாழல்

7. உந்தி

இவ்விரண்டும் பெண்களுடைய விளையாட்டு என்று தெளிவாகிறது. ஆனால் விளையாட்டின் விவரங்கள் தெரியவில்லை.

8. பூவல்லி (பெண்கள் பூக் கொய்யும் போது பாடுவது)

9. தோனோக்கம் (பெண்கள் தோள் கோர்த்துப் பாடிக்குதிப்பது)

10. ஊசல் (இசை இக்காலத்தில் ஊஞ்சற்பாட்டு என்கிறோம்)

11. காலைத்துயில் எழுப்பும் பாட்டு.

இங்ஙனம் தாலாட்டு, அம்புலி, செங்கீதை, சப்பாணி முதலிய வேறு பல வகைகளும் இருக்கின்றன. பிள்ளைத்தமிழ் என்னும் நூல் வகுப்பைக் கொள்க. இவற்றிலே தாலாட்டு, ஊஞ்சல், அம்மானை, பள்ளியெழுச்சி என்ற நான்கு வகையும் வெவ்வேறு சந்தங்களுடன் இக்காலத்தில் நமது பெண்களுக்குள் வழங்கி வருதல் காண்கிறோம். பழைய காலத்து வகைகளை நாம் விஸ்தாரமாகக் கவனிப்பதற்கு வேண்டிய செளகர்யங்கள் இல்லை. ஆதலால் பெயர் மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறோம்.

குடும்பத்துப் பெண்களிலே சாஸ்திரப்படி சங்கீதம் கற்றுக் கொள்வோரின் தொகை மிகவும் குறைவு நகரப்பழக்கமும் சுக ஜீவனமும் உடைய குடும்பங்களில் மாத்திரமே பெண்களுக்கு வாத்தியார் வைத்துப்பாட்டு கற்றுக் கொடுக்கிறார்கள். ஆயினம் வாத்தியார் இல்லாமல் சாஸ்திர வழிகளில் வாசனை ஏற்பட்டவர் பலர் உண்டு.

இவர்களையல்லாது பொதுப்படையாகப் பார்க்கும்மிடத்து நமது மாதர்

பாட்டுக்களின் இன்பம் பின்வருமாறு:

1. கல்யாணப்பாட்டு, நலங்கு, பத்யம், ஊஞ்சல், ஒடம் முதலியன.

(3. (:

96