பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கும்மிப்பாட்டு குதித்துப் பாடுகின்ற பாட்டுக்கள் இவ் வகுப்பில் கிளிப்பாட்டு, பல்லிப் பாட்டு முதலியளவும் அடங்கும்.

3. அம்மானை, தூது, மாலை, சோபனம் முதலிய நீண் கதைப்பாட்டுக்கள்.

4. பொதுத்தாலாட்டு, விளையாட்டுப்பாட்டுக்கள், ஜவாளிகள், கீர்த்தனை முதலியன.

மேலும் பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள், நெல்குத்துவோர், சுண்ணாம்பு, இடிப்போர், குறி கார், தொம்பாச்சி, முதலிய வகுப்பினர் தமக்கென்று தனியாக மெட்டுக்கள் வைத்து கொண்டிருக்கிறார்கள். மேற்கூறப்பட்ட பாட்டுக்களில் மிகவும் இன்பமான சந்தங்கள் பல இருக்கின்றன. இவை கால வென்றத்தில் மறைந்து போகு முன்பாக சங்கீத வித்வான்கள் பொறுக்கி எடுத்து ஸ்வர நிச்சயம் செய்து வித்தைப் பழக்கத்திலே சேர்த்து விட வேண்டும்.

பெண்களுக்குக் கல்விப் பயிற்சி ஏற்பட்டால் இப்போதுள்ள கொச்சை மொழிகளும் பிழைகளும் நலக்குறைவும் பொருந்திய பாட்டுக்களை மறந்து விடுவார்கள். ஆனால் அத்துடன், பழைய சங்கீதக் கட்டுகளை மறந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய வழிகளை முற்றிலும் மறந்து போய் நமது பெண்கள் நாடக மெட்டுக்கள்முதலியவற்றையே பாடத் தொடங்கிவிட்ால் தமிழ் நாட்டில் சங்கீத உணர்ச்சி நாசமாகிவிட ஹேது உண்டாகும்’ என்றும்,

‘கொச்சை மொழிகளும் ரஸ்க் குறைவும் மலிந்த பாட்டுக்கள் என்று சொன்னோம். ஆனாலும் ஒரு கூவைட பதரில் ஒரு ஆழக்கு அரிசி, அகப்படும். அதை நாம் இழந்து விடக்கூடாது. கவிதைத் தேட்டமுடையோர் நமது பெண்களின் பாடப்டைத் தேடிப்பார்த்தால் சிற்சில இடங்களில் நல்ல கவிதை கிடைக்கும். பாட்டி ராமாயணத்தில் குசலவரின் கதையை ஒரு களப்பாட்டாகச் சொல்லுவாள். அதில் சிதையின் கஷ்டங்களைக் கேட்கும் போது குழந்தைகள் எல்லாம் கண்ணிர் விட்டமும் ராமனை குசலவர் வெல்லும் இடத்து வரும் போது மனதிலே ஆத்திரம் பொங்கும் ராமனுக்கு வேணும் நன்றாக வேணும் என்று தோன்றும். நலங்குப் பாட்டு, கும்மி முதலியவற்றிலே கூடச்சில இடங்களிலே முத்துப் போல வார்த்தைகள் அகப்படும். தொழிற் பெண்களின் பாட்டு மிகவும் ரஸமானது. சந்தமும் இன்பம் ஒன்றுக்குப் பாதி நல்ல கவிதை.

பெண்களின் பாட்டில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களில் பெரும்பகுதி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இதன் சம்பந்தமாக இங்கே இன்னும் சில வார்ததைகள் சேர்க்க விரும்புகிறேன். வீட்டிலே பந்துக்களின் முன்பும் விவாக சந்தர்ப்பங்களிலும் பாடும் போது கூச்சத்தினாலே பாட்டை விடக்கூடாது.

97