பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 99 இந்திராவுக்கு பொம்மைகள் என்றால் மிகவும் பிரியம். இதற்காகவே தாத்தா பல பல வண்ணங் களில் மிக அழகான பொம்மைகளை பேத்திக்கு கூடை கூடையாக வாங்கிக் கொடுத்திருந்தார். ஆனால் அவற்றிலிருந்து இந்திரா சிப்பாய் பொம்மைகளையும், பீரங்கி வண்டி, யானை, குதிரை போன்றவற்றை மட்டுமே எடுத்து வைத்துக்கொண்டு விளையாடுவார். திடீரென்று கமலா நேருவின் உடல் நிலை சீர் கெட்டது. மனைவியை சிகிச்சைக்காக ஸ்விட்சர் லாந்திற்கு அழைத்துச் சென்ற நேரு இந்திராவை யும் உடன் அழைத்துச் சென்றார். அந்த நாட்டின் அழகிய மலைச் சிகரங்களும் அழகிய ஏரி குளங்களும் இந்திராவை வெகுவாகக் கவர்ந்தன. அப்போது இந்திராவுக்கு வயது பத்து. தந்தை யுடன் இந்திரா லண்டன், பாரீஸ், பெர்லின் போன்ற நகரங்களுக்கும் சென்று சுற்றிப் பார்த் தார். பல அரசியல் தலைவர்களையும். புரட்சி வீரர் களையும், எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர் களையும், விஞ்ஞானிகளையும், ஒவியர்களையும், பல இடங்களுக்கும் தந்தையுடன் சென்று சந்தித் дѣтт.