ராஜீவ் காந்தி வரை 101 கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதன் பள்ளியில் சேர்ந்து இந்திரா சில காலம் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். இதன் மூலம் கவியரசர் தாகூருடன் பழகும் வாய்ப்பு இந்திராவிற்குக் கிட்டியது. சாந்திநிகேதன் கல்வி முறையும்; ஆசிரம பழக்க வழக்கங்களும் இந்திராவை வெகுவாகக் கவர்ந்தன. பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்தவ ரானாலும், இந்திரா என்றுமே எளிமையாக இருக்கவே ஆசைப்படுவார். அவர் விரும்பும் எளிமை அந்த ஆசிரமம் முழு வதும்; பள்ளி முழுவதும் இருந்தது. ஒவ்வொருவரும் தங்கிப் படிப்பதற்கு படா டோபமில்லா சிறிய குடிசைகள். மரநிழலில் நடைபெறும் பள்ளி வகுப்புகள், ஆசிரமத்திலும், பள்ளியிலும் உள்ளவர்களின் எளிமையான வாழ்க்கையும், இனிய சுபாவமும் இந்திராவின் மனதிற்கு மிகவும் இதமாக இருந்தன. கல்வியும், கலையும் கைகோர்த்துவாழும் சாந்திநிகேதன வாழ்க்கை இந்திராவிற்கு மிகவும் பிடித்திருந்தது.
பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/103
Appearance