பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 103 இந்திரா குருதேவரிடம் விடைபெற்றுக் கொண்டு உடனே புறப்பட்டார். 'வழித்துணைக்கு யா ரை யா வ து அனுப் பட்டுமா?" என்று குருஜி கேட்டார். வேண்டாம்; நான் ஜாக்கிரதையாய்ப் போய் விடுகிறேன்” என்று இந்திரா கூறி விடைபெற்று தனியே வந்து விட்டார். கமலாவின் உடல் நிலையை அடிக்கடி டாக்டர்கள் வந்து பரிசோதித்தனர். சுவாசப்பை மிகவும் பலகீனமடைந்து, நோய் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்திரா இரவும் பகலும் அன்னையின் அருகி லேயே இருந்து வேண்டிய உதவிகள் செய்தார். தாய்க்கு அடிக்கடி ஆறுதல் கூறினார். டாக்டரின் ஆலோசனைப்படி கமலாவின் சிகிச்சைக்காக நேரு, தன் மகளுடன் ஜெர்மனி சென்றார், அங்குள்ள சிறந்த மருத்துவமனையில் கமலா சிகிச்சை பெற்று வந்தார். துயரமும், கவலையும் நிறைந்த அந்த நாட் களில் இந்திராவிற்கு துணையாகவும் ஆறுதலாக வம் இருக்கவர் பெரோஸ் காந்திதான்.