பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 107 போலவே பெரோஸ் காந்தியும் தலைமறைவாகி விட்டார். இரவும் பகலும் போலீஸ் அந்த வீட்டைச் சுற்றி காவல் இருந்தது. இந்திரா அங்கிருந்து அலகாபாதுக்கு வந்து விட்டார். பின்னர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக பெரோஸ் காந்தி நைனி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்திராவும், அவருடன் கைதான ஐந்து பெண்மணிகளும் அருகில் இருந்த பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நேருஜி அகமத் நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின்பு 13-5-1943-ல் இந்திரா விடுதலை செய்யப்பட்டார். 1944-ல் இந்திரா காந்தி ராஜீவ் காந்தியைப் பெற்றெடுத்தார்; அடுத்து 1946-ல் சஞ்சய் காந்தி பிறந்தார். 15-8-1947 அன்று இந்தியா சுதந்திரமடைந் தது. பண்டித நேரு முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். நாடு முழுவதும் மகிழ்ச்சி பொங்கியது ஆனால் அந்த சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் முழுமையாக அனுபவிக்க விடவில்லை. நாட்டை