பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை மகாத்மா காந்தி (1869 – 1948) "தாய் நாட்டின் சேவைக்காக என் வாழ்வு அனைத்தையும் கான் அர்ப்பணித்திருக்கிறேன்இந்த சேவை இல்லாவிடில் என் வாழ்க்கையே எனக்குத் தாங்க முடியாத சுமையாகிவிடும்.' -காந்திஜி குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்னும் ஊரில் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார். தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. இவரது மனைவி புத்லி பாய்க்கு, நான்காவது மகனாக காந்தி பிறந்தார், தந்தை போர்பந்தர் சமஸ்தானத்து திவானாகப் பணி புரிந்தார்.