பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மகாத்மா காந்தி முதல் இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை பாகிஸ்தா னுக்குக் கொடுத்து விட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியாவிலும், பாகிஸ் தானிலும் வகுப்புக் கலவரங்கள் தலைவிரித் தாடின. பாகிஸ்தானிலிருந்து அகதிகள் கூட்டம் கூட்ட மாக வந்ததன் காரணமாக டெல்லியிலும் கலவரங் கள் பரவின. மதவெறியையும், வகுப்புக் கலவரங்களையும் கண்டு மகாத்மாவின் ஆத்மா வேதனைக்குள் ளாயிற்று. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்குமிடையே நல்லெண்ணமும், நல்லுறவும் நிலவ தினமும் பிரார்த்தனைக் கூட்டங்களின் போது மகாத்மா காந்தி மனமுருகி கேட்டுக் கொண்டார். பிரதமர் நேரு சிறுபான்மையினரின் உயிரைக் காக்கவும், டெல்லியில் அமைதி நிலவச் செய்யவும் தம் உயிரையும் மதியாது செயலில் இறங்கினார், கலவரங்கள் நடக்கும் இடங்களுக்கு பாதுகாப் பின்றி பாய்ந்து ஓடினார். தன் இரு குழந்தைகளுடன் தந்தையோடு வசித்து வரும் இந்திரா; தந்தையின் உயிருக்கு, ஆபத்து ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று மிகவும் கவலையுடன் இருந்தார்.