பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 மகாத்மா காந்தி முதல் தரும் போது எல்லாம் அவர்களை வரவேற்க வேண்டிய பொறுப்பு இந்திராவிடம் இருந்தது. இதனால் இந்திரா காந்தி அகில உலக அளவில் பலராலும் அறியப்பட்டவரானார். சில வருஷங்கள் பெரோஸ் காந்தி தன் மனைவி குழந்தைகளுடன் பிரதம மந்திரி இல்லத் திலேயே வசித்து வந்தார். பெரோஸ் காந்தி பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் எம்.பிக் களுக்காக அளிக்கப்பட்ட தனி வீட்டில் வசிக்கலானார். குழந்தைகள் இருவரும் விடுதியில் தங்கி படித்து வந்தனர். நேரம் கிடைத்த போதெல்லாம் இந்திரா குழந்தைகளுடன் கணவனைச் சென்று பார்த்து. வருவார். = 1959-ல் இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவ. ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பதவிக்கு இவர் நான்காவது பெண் மணி இதற்கு முன் அன்னிபெஸண்ட், சரோஜினி தேவி, நெல்லி சென் குப்தா, ஆகிய மூவரும் அப். பதவியை வகித்த பெண்மணிகளாவார். இதற்கு முன் இவர்கள் குடும்பத்தில் மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும்