உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 115 நேரு அங்கில்லை. ராஜீவ் பிறந்தபோது நேரு சிறையில் இருந்தார். இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிர மாக நடந்து கொண்டிருந்தது. "வெள்ளையேன வெளியேறு" போராட்டத்தை மகாத்மா காந்தி தீவிரமாக நடத்திக் கொண்டு இருந்தார். சிறையில் இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு விற்கு பேரன் பிறந்த மகிழ்ச்சிகரமான செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே ராஜீவ் பிறந்த தைப் பற்றித் தன் மகள் இந்திராகாந்திக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், "நாற்பது கோடி இந்தியரில் முதல் இந்தியர்' என்று எழுதியிருந்: தாா. குழந்தை பிறந்த 11-ம் நாள் பெயர் சூட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. உறவினர் களும், நண்பர்களும், குழந்தையின் கொள்ளை அழகைப் பார்த்து வியந்து பாராட்டினர். அன்று அலர்ந்த ரோஜா மலர் போல் சிவந்த பட்டுப் போன்ற உடலும்; சிரிக்கும் கண் களும் அனைவரையும் கவர்ந்தன. ஆனால் அந்த மகிழ்ச்சியைத் தங்களுடன் சேர்ந்து அனுபவிக்க தன் தந்தை அங்கு இல்லாதது இந்திராகாந்தியின் மனதை வருத்தியது. ஆயினும் விரைவிலேயே மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு விட்டார். ஆம்! நாட்டு