பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மகாத்மா காந்தி முதல் விடுதலைக்காக தியாகம் புரித்து வரும் பரம்பரை யில் பிறந்தவரல்லவா அவரும்! பிள்ளைப் பருவமும்; பள்ளிப் பருவமும் ராஜீவ் காந்தி மற்ற குழந்தைகளைப் போல் எல்லோருடனும் வலியச் சென்று பேசி சகஜமாகப் பழகும் இயல்பு இல்லாதவர். ஆனால் அதற்குக் காரணம் கர்வம் அல்ல. கர்வம் என்றால் என்ன என்று கூட ராஜீவ் காந்திக்கு இறுதிவரைத் தெரி யாது! ஆனால் அளவிற்கு மீறிய கூச்ச சுபாவம் உடையவர். பிறரிடம் மிகுந்த மரியாதை செலுத்தக் கூடியவர். பள்ளிப் பருவத்திலிருந்து பெரிய தலைவர் ஆன பிறகும் கூட அவர் அப்படித் தான் இருந்தார். எப்போதும் மென்மையான குரலில் சுருக்க மாகத்தான் பேசுவர். சிரித்த முகமும், யாரிடமும் கோபமோ, துவேஷமோ கொள்ளாத இயல்பும் உடையவர். ராஜீவ்காந்தி தன்னுடைய ஆறாவது வயதில் 1950-ல் டுன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பத் தாண்டுகள் அந்தப் பள்ளியில் படித்தார். அங்கு அவர் எழுதும் தேர்வுகளில் சுமாரான மார்க்கு களே எடுப்பார். பேச்சில், நடத்தையில், புத்தி சாலித்தனம் கொண்ட ராஜீவ் காந்தி தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பது ஆசிரியர் களுக்கே வியப்பாயிருக்கும்.