பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மகாத்மா காந்தி முதல் ராஜீவின் மீது கட்சித் தலைவர்களின் பார்வை திரும்பியது. அம்மாவிற்ரு வாரிசாக வந்திருக்க வேண்டிய சஞ்சய் இறந்து விட்டார்; இனி அந்த வெற்று இடத்தை நிரப்பவும்; தாயாருக்கு உதவியாகவும் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வரவேண்டும் என அனைவரும் வற்புறுத்தினர். ராஜீவால் அவற்றை மீள முடியவில்லை. இதைக் கேள்விப்பட்ட சோனியா காந்தி தனது அறைக்குள் புகுந்து கொண்டு நான்கு நாட் கள் அழுதார். தனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் படிக் கெஞ்சினார். அதே போன்று இந்திரா காந்தியும், "ராஜீவ் நீ அரசியலில், இறங்கியே ஆக வேண்டும்; வேறு யாரையும் நம்ப முடியாது” என்று கண்ணிர் மல்க வற்புறுத்தினார். இறுதியில் ராஜீவ் மனைவியை சமாதானப் படுத்தி விட்டு, தாயின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார், அதன் பிறகு ராஜீவ் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார். 1981-ம் ஆண்டு தனது 36-வது வயதில் ராஜீவ் காந்தி பார்லிமெண்ட் உறுப்பினர் (எம். பி) ஆனார் பிறகு இ. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாள ராக நியமிக்கப்பட்டார். பின்னர் படிப்படியாக ராஜீவ் காந்தி இந்திரா காந்தியின் வாரிசாக அரசி