பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 123 யலில் வளர்ந்து வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு ஒரு சோதனை காலம் ஏற்பட்டது. இந்திராகாந்தி சுட்டுக் கொலை பஞ்சாபில் தீவிரவாதிகள், மதப்பூசலைக் கிளப்பி தனி நாடு கேட்டு அப்பாவி மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். இந்திரா காந்தி மிகுந்த துணிச்சலுடையவராய் பஞ்சாப் பிரச்சினையில் ஈடுபட்டார். அமிர்தசரஸ் பொற் கோயிலை ஆக்கிரமித்துக் கொண்டு; வன்முறையில் ஈடுபட்டுவரும், தீவிர வாதிகளை, ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கி ஒடுக்கினார். இதனால் மனம் குமுறியிருந்த தீவிரவாதி களின் சதித் திட்டத்தினால், இந்திரா காந்தி, அவரது வீட்டில் அவரது பாதுகாவலர்களாலேயே 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். நெருக்கடி மிகுந்த நேரம் சற்றும் எதிர்பாராத இந்திரா காந்தியின் மரணத்தின் முலம் நாடு ஸ்தம்பித்துப் போனது. நாட்டின் தலைமைப் பதவியை உடனடி யார் ஏற்பார்கள் என்று குழம்பிக் கொண்டிருந்த நேரம்