உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மகாத்மா காந்தி முதல் நம்பிக்கை நட்சத்திரமாக அருகில் மின்னிக் கொண்டிருந்த ராஜீவ்காந்தியை, தற்காலிகப். பிரதமராக கட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுத் தார்கள். இடைக்கால பதவிதான் என்றாலும் ராஜீவின் தலைமையை நாடு நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டது. இதன் பிறகு இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலின்போது 4-ல் 3 பங்கு மெஜாரிட்டியுடன் இ. காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது 40தான். இந்திய அரசியலில் இவ்வளவு இளைஞராக யாரும் பிரதமர் பதவி வகித்த தில்லை. ராஜீவ்காந்தி பிரதமர் பதவியை மிகுந்த, பொறுப்புணர்வுடன் வகித்து வந்தார். ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல அரிய திட்டங்களை அவர் உருவாக்கினார். தொழில் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாடுபட்டார். கிராமப்புற வளர்ச்சிக்கு வழிகோலும் திட்ட மாக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டு வந்தார். அதிகாரங்கள் அனைத்தும் மக்களுக்கே,' என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதனாலேயே, 1989-ம் ஆண்டு தேர்தலில் மக்கள், தன் கட்சியைப் புறக்கணித்து தன்னை