ராஜீவ் காந்தி வரை 127 எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போன்று "போபர்ஸ் விவகாரம்” இது போன்ற குற்றச் சாட்டுகளினால் ராஜீவ் மனமுடைந்தார். கரை படாத கரம் படைத்தவர் ராஜீவ்காந்தி என்கிற பெயருக்கு நாலா திசைகளிலிருந்துப் களங்கம் கற்பிக்கப்பட்டது. அதனைத் துடைத்தெறிந்து மீள்வதற்குள், 1989-ல் நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தி பதவி இழந்து தோல்வியைத் தழுவினார். ஆனால் இந்த இடைவெளி அதிக நாள் நீடிக்க வில்லை. அவர் பதவியிலிருந்து தூக்கி ஏறியப் பட்ட 19 மாதங்களுக்குள் திடீரென மீண்டும் தேர்தல் வந்தது. தன்னை முழுமையாகத் தேர்தல் பணிக்கு அற்ப்பணித்துக் கொண்ட ராஜீவ் காந்தி, புதிய தெம்புடன், மக்களிடையே இடைவிடாமல் பிரசாரம் செய்தார். மக்கள் ராஜீவை முழுமை யாக நம்பத் தலைப்பட்டனர். ஒரு சமயம் இந்திரா காந்தி பேட்டி ஒன்றின் போது, ராஜீவ் காந்தி, அவரது தம்பி சஞ்சையை விட மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆம்! ராஜீவின் நடைமுறையும் அவரது செயல்களும் அப்படித்தான் இருந்தன. இறுதி வரை தன்னம்பிக்கையை இழக்கவே இல்லை.
பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/129
Appearance