பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜிவ் காந்தி வரை எல்லோருக்கும் சம்மதம். வீட்டில் என்ன |ಿ கிறது: ©ᎫᎶᏡᎢ இவர்கள் 6ುಖnd வந்திருக்கிறர் 呜蟹 என்றுகூட கஸ்துரிபாய்க்குப் புரியவில்லை. புரோகிதர் வந்ததும் ஏழுவயது காந்திக்கும், ஏழு வயது கஸ்துாரிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. # நிச்சயதார்த்தம் நடந்த ஆறு வருஷங்களுக் குப் பிறகு அதாவது, காந்தியின் 13-வது வயதில் அவருக்கும் கஸ்தூரிபாய்க்கும் திருமணம் நடை பெற்றது, 1887-ல் காந்திஜி தமது 18-வது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வு பெற்றார். பின்னர் கல் லூரிப் படிப்பிற்காக பவநகர் என்னும் ஊருக்கு பெற்றோரை விட்டு முதன்முறையாகச் சென்றார்; ஆனால், காந்திஜி முதலாண்டுக்குப் பிறகு அக் கல் லூரி செல்ல விரும்பவில்லை. மேற்கொண்டு என்ன செய்வது என்று தந்தை யோசித்தார். எப்படியாவது படிப்பைத் தொடர வேண்டுமே! காந்திஜியின் தந்தைக்கு வேண்டிய ஒருவர் காந்தியை இங்கிலாந்து அனுப்புங்கள்; பாரிஸ்ட ராக வரட்டும்,” என்றார். காந்திஜிக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. உறவினர்கள் புத்லிபாயிடம், காந்திஜியை லண்டனுக்கு சட்டப் படிப்பு படிக்கஅனுப்புமாறு கூறினர். இங்கிலாந்து செல்ல காந்தியும் விரும்பினார்.