130 மகாத்மா காந்தி முதல் இதே போல் இந்திரா காந்தியும் கூறினார். 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் நாள் ஒரிஸாவிலுள்ள புவனேஸ் நகரில் ஒரு பிரும் மாண்டமான பொதுக் கூட்டமொன்றில் அவர் பேசினார். எதிரே கூடியிருந்த லட்சக் கணக்கான மக்கள் முன்னிலையில், தனது ஆவேசமான சொற். பொழிவின் போது இந்திராகாந்தி பின் வருமாறு கூறினார்: "இன்று நான் உயிரோடு இருக்கிறேன். நாளை ஒரு வேளை இருக்க மாட்டேன். இந்தியாவின் ஒற்றுக்மைகாக மதச் சார்பின்மைக்காக நான் இன்று இறந்தாலும் அந்த மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்வேன். எனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும், இந்த பாரத நாட்டை பலப் படுத்த உதவும்” என்றார். அதுவே அவரது கடைசி மேடைப் பேச்சா யிற்று. மறுநாள் 1984 அக்டோபர் 31-ம் நாள் காலையில் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட் டார். அவரது புனித உடலிலிருந்து பெருக்கெடுத் தோடிய தியாக ரத்தம் தீன்மூர்த்தி பவனிலுள்ள மண்ணில் உறைந்து நின்றது.
பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/132
Appearance