பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் \

பிள்ளையைக் கண்காணாத தசத்திற்கு அனுப்பப் பயமாயிருந்தது. இந்த த்தில் காந்தியின் தந்தை இறந்து விட்டார். = -

காந்திக்கு சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. தன் அம்மாவின் தயக்கத்தை உணர்ந்த காந்திஜி 'அம்மா நான் எங்கிருந்தாலும் உன் நினைவாகவும். கஸ்துரியின் நினைவாகவும் தான் இருப்பேன்; அயல்நாடு போனாலும் மது, மாமிசம் எதையும் விரலாலும் தொட மாட்டேன். கஸ்துாரியைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனத் தாலும் நினைத்துப் பார்க்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து கொடுத்தார். தாயார் சமாதானமடைந்ததும், காந்திஜி விடைபெற்றுக் கொண்டு இங்கிலாந்து வந்து, சேர்ந்தார். சுத்த சைவத்தைத் தழுவியிருக்கும் காந்திஜி அங்கு ஆரம்பச் சில நாட்கள் சாப்பாட்டிற்கு - மிகவும் கஷ்டப்பட்டார். பிறகு விரைவிலேயே சுய மாகச் சமைக்கக் கற்றுக் கொண்டு விட்டார். சிக்கனமாக வாழ்ந்து, பணத்தை மிச்சம் பிடித்து நிறைய நூல்கள் வாங்கி இடைவிடாமல் படித்தார் அதில் அவர் மனதைக் கவர்ந்த புத்தகம் பகவத் கீதை. கஷ்டப்பட்டு பரீட்சைக்குப் படிக்கும்போது கூட நிதம் கீதையின் சில பகுதிகளை காந்திஜி படிப்பது வழக்கம்.