பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் à. ாகப் புண்படுத்திய இன்னொரு சம்பவமும்

நடந்தது. ; ஒரு நாள் காந்திஜிக்கு ஒரு வழக்கு சம்பந்த _Aாக டர்பனிலிருந்து பிரிடோரியாவுக்குப் போக நேர்ந்தது. முதல் வகுப்பு டிக்கெட் வாங்கிக் கொண்டு பிரயாணம் செய்தார். வண்டி நடுநிசி யில் நேடாலின் தலைநகரான 'மாரிட்ஸ் பர்க்கை அடைந்தது. அப்போது காந்திஜி உட்கார்ந்திருந்த கம்பார்ட்மெண்டுக்குள் நுழைந்த ஒரு தென்னாப் பிரிக்க வெள்ளையன் காந்திஜியை இந்தியன் என்று கண்டு கொண்டான்.

உடனே, அவன், காந்திஜியை நோக்கி 'நீ இங்கே உட்காரக் கூடாது, வேறு கம்பார்ட் மெண்டுக்குப் போ,' என்று விரட்டினான். காந்திஜி அமைதியாக அவனிடம் டிக்கெட் டைக் காண்பித்து, "நான் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருக்கும் போது ஏன் வேறு கம்பார்ட் மெண்டுக்குப் போக வேண்டும்.” என்று கேட்டார். வெள்ளையன் கோபத்தோடு வெளியேறி அதிகாரிகளை அழைத்து வந்தான். அதிகாரிகளோ, சற்றும் இரக்கம் இல்லாமல், "இந்தியர்கள் முதல் வகுப்பில் பிரயாணம் செய்ய உரிமை கிடையாது: உடனே வேறு இடம் போய் விடு” என்று விரட்டினர். காந்திஜி இறங்க மறுக்கவே, அந்த வெள்ளையர்கள் அவரது பெட்டி படுக்கைகளை பிளாட்பாரத்தில் வீசி எறிந்தார்கள். காந்திஜி யையும் கீழே இறக்கி விட்டு விட்டனர்.